விஜய் சார் இதை மிஸ் பண்ணிடாதீங்க..! பாக்ஸ்கான் பெரிய திட்டத்துடன் இந்தியாவுக்கு வருகிறது!

சென்னை: இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதிக்கு முதுகெலும்பாக இருக்கும் பாக்ஸ்கான் தற்போது மாபெரும் திட்டத்துடன் களமிறங்க முடிவு செய்துள்ளது.

பாக்ஸ்கான் இதுநாள் வரையில் சென்னை, பெங்களூர் தொழிற்சாலைகளில் ஐபோன், ஸ்மார்ட்போன், ஐபேட் மற்றும் இதர கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தான் அதிகளவில் தயாரித்து இந்தியாவிலும், உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.

விஜய் சார் இதை மிஸ் பண்ணிடாதீங்க..! பாக்ஸ்கான் பெரிய திட்டத்துடன் இந்தியாவுக்கு வருகிறது!

கடந்த 10-15 வருடத்தில் தமிழ்நாடு மற்றும் இந்திய சந்தையை முழுமையாக புரிந்துக்கொண்ட பாக்ஸ்கான் அடுத்தக்கட்டமாக செமிகண்டக்டர், அட்வான்ஸ் பேகேஜிங், எலக்ட்ரிக் வாகனங்கள், விண்வெளி போன்ற துறையில் தனது உற்பத்தி ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்திய உற்பத்தி சங்கிலியில் பாக்ஸ்கான் உயரிய இடத்தை எட்ட உள்ளது.

பாக்ஸ்கான் மூலம் தமிழ்நாடு எந்தளவுக்கு பலன் அடைந்துள்ளது என இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் பார்த்து வரும் வேளையில், பாக்ஸ்கான் முதலீடுகளை ஈர்ப்பதில் தொடர்ந்து போட்டி வருகிறது.

Also Read

இதனால் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு முன்கூட்டியே திட்டமிட்டு இப்புதிய தொழில்நுட்பத்தில் அதன் முதலீட்டை மொத்தமாக ஈர்க்கும் வழிகளை ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேலும் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனாவுக்கு இது மிகவும் முக்கியமான TASK ஆக இருக்கப்போகிறது.

பாக்ஸ்கான் நிறுவனத்தின் எதிர்கால திட்டத்தை சிங்கப்பூரில் நடந்த IBM திங்க் கூட்டத்தில் கலந்துக்கொண்ட பாக்ஸ்கான் நிறுவனத்தின் ஏஐ மற்றும் குவான்டம் கம்பியூட்டிங் பிரிவின் தலைவரான ஜெஸ்ஸி சாவ் தெரிவித்தார். மேலும் இவர் கூறுகையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் ஒவ்வொரு அரசின் முக்கியதுவம் மற்றும் அதற்கான கொள்கை அடிப்படையில் உற்பத்தி மற்றும் சப்ளை செயின் வாய்ப்புகளை தேடி வருகிறது எனவும் தெரிவித்தார்.

Recommended For You

சமீபத்தில் ஹெச்சிஎல் - பாக்ஸ்கான் நிறுவனம் இணைந்து சுமார் 3700 முதலீட்டில் உருவாக்கப்படும் செமிகண்டக்டர் OSAT திட்டத்தை உத்தர பிரதேசம் தட்டிச்சென்றது. இதற்கு முன்பு பாக்ஸ்கான் தனது புதிய ஐபோன் அசம்பிளி தொழிற்சாலையை தேவனஹள்ளி பகுதியில் சுமார் 25000 கோடி ரூபாயில் அமைக்கும் திட்டத்தை கர்நாடக அரசு தட்டிச்சென்றது.

இந்த நிலையில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் அடுத்தடுத்த முதலீடுகளை ஈர்க்க மாநில அரசுக்கு பெரும் போட்டி போடும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. இதற்கிடையில் குஜராத் சமீபத்தில் மிகப்பெரிய தொழிற்துறை கொள்கை அறிவித்து ஒட்டுமொத்த முதலீட்டாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+