தைவான் நாட்டை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் தான் ஆப்பிள் நிறுவனத்துக்கு தேவையான ஐபோன்கள், ஏர்பாட்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து வழங்கி வருகிறது. ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் தமிழ்நாட்டில் ஏற்கனவே தன்னுடைய ஐபோன்கள் உற்பத்தி ஆலையை நிறுவி ஐபோன்களை உற்பத்தி செய்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஹைதராபாத்தில் நிறுவியுள்ள தங்களுடைய ஆலையில் முதன்முறையாக ஆப்பிள் ஏர்பாட்களின் உற்பத்தியை தொடங்கி இருக்கிறது. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தக மோதல்கள் அதிகரித்திருப்பதால் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஐபோன்கள் , ஐமேக் கணினிகள் ,ஏர்பாட்கள், ஸ்மார்ட் வாட்சுகள் உள்ளிட்டவற்றின் உற்பத்திக்காக சீனாவை சார்ந்திருக்காமல் பெரும்பாலான உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்ற வேண்டும் என திட்டமிட்டு இருக்கிறது.

ஏற்கனவே இந்தியாவில் ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா ஆகிய நிறுவனங்கள் ஆப்பிள் ஐபோன்களை உற்பத்தி செய்து வழங்கி வருகின்றன. இந்த உற்பத்தியை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும் என ஆப்பிள் திட்டமிட்டு இருக்கிறது. அது மட்டும் இன்றி தங்கள் பிராண்டின் மற்ற சாதனங்களையும் இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டும் என முடிவு செய்திருக்கிறது. இந்த சூழலில் தான் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஹைதராபாத் ஆலையில் ஆப்பிள் ஏர்பாட்களின் உற்பத்தியை தொடங்கி இருக்கிறது.
இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் மின்னணு சாதனங்களை தயாரிக்கும் மையமாக இந்தியா படிப்படியாக மாறி வருகிறது. ஹைதராபாத் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆப்பிள் ஏர்பாட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என ஃபாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தவிர ஃபாக்ஸ்கான் நிறுவனம் பெங்களூருவில் மற்றொரு உற்பத்தி ஆலையையும் நிறுவி வருகிறது. இங்கே ஐபோன்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும் இந்தியாவிலிருந்து ஐபோன் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு இந்த ஆலை உதவும் என்றும் தெரிவித்துள்ளது. ஓர் ஆண்டுக்கு 20 மில்லியன் ஐபோன்களை உற்பத்தி செய்யக் கூடிய வகையில் பெங்களூரு உற்பத்தி ஆலை அமைக்கப்படுவதாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் கூறியிருக்கிறது.
சீனாவுக்கு அடுத்தபடியாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் அமைக்கும் மிகப்பெரிய உற்பத்தி ஆலையாக பெங்களூரு ஆலை இருக்கும். இதற்காக ஃபாக்ஸ்கான் நிறுவனம் 25 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்து இருக்கிறது. இந்தியாவில் ஃபாக்ஸ்கானுக்கு அடுத்தபடியாக ஐபோன்கள் தயாரித்து வழங்கும் நிறுவனமாக டாடா எலக்ட்ரானிக்ஸ் உருவெடுத்திருக்கிறது. ஓசூரில் இருக்கும் ஐபோன் ஆலையில் ஏற்கனவே ஐபோன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஓசூரில் உற்பத்தி செய்யப்பட்ட ஐபோன்கள் கூடிய விரைவில் ஏற்றுமதி செய்யப்பட இருப்பதாக டாடா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய அமெரிக்க சந்தைக்கு தேவையான 60 மில்லியனுக்கும் அதிகமான ஐபோன்களை இந்தியாவில் உற்பத்தி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி இருக்கிறது. 2024ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் ஆப்பிள் நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்ட 18 முதல் 20% ஐபோன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டவை, 2025 ஆம் ஆண்டில் இந்த விகிதம் 25 முதல் 30 சதவீதமாக உயரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications