தைவான் நாட்டின் மிகப்பெரிய ஒப்பந்த உற்பத்தியாளரான பாக்ஸ்கான் மற்றும் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான ஹெச்சிஎல் இணைந்து இந்தியாவில் செமிகண்டக்டர் பிரிவில் OSAT தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்து, கடந்த சில மாதங்களாக இதுகுறித்த பேச்சுவார்த்தை நடத்து வருகிறது. இரு நிறுவனங்களும் தமிழ்நாட்டில் அதிகப்படியான வர்த்தகத்தைக் கொண்டு இருக்கும் காரணத்தால் இந்த செமிகண்டக்டர் தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் சற்றும் எதிர்பார்க்காத வகையில் இக்கூட்டணி, உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய தொழில் நகரமான நொய்டாவில், விரைவில் செயல்பாட்டுக்கு வரவிருக்கும் ஜெவர் விமான நிலையத்திற்கு அருகில், சுமார் 30 ஏக்கர் நிலத்தை இந்த தொழிற்சாலைக்காகப் பெற்றுள்ளது. இந்த இடத்தில் தான் பாக்ஸ்கான் - ஹெச்சிஎல் ஆகியவை இணைந்து ஒப்பந்த அசெம்பிளி மற்றும் சோதனை (OSAT) தொழிற்சாலையை நிறுவப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் (YEIDA) பகுதியில் தான் தற்போது பாக்ஸ்கான் - ஹெச்சிஎல் கூட்டணி 30 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது. இந்த கூட்டணியின் திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றால், உத்தரப்பிரதேசத்தில் முதன்முறையாக செமிகண்டக்டர் துறையில் ஒரு தொழிற்சாலை உருவாகும் என்று தெரிகிறது. இதே செமிகண்டக்டர் OSAT தொழிற்சாலையை அமைக்கத் தான் பாக்ஸ்கான் - அனில் அகர்வால் உடையே வேதாந்தா குழுமம் கைகோர்த்தது. ஆனால் இது தோல்வியில் முடிந்தது.
பாக்ஸ்கான் - ஹெச்சிஎல் கூட்டணி இந்த செமிகண்டக்டர் OSAT தொழிற்சாலையில் 37.2 மில்லியன் டாலர் முதலீடு செய்து பாக்ஸ்கான், 40% பங்குகளை கைப்பற்ற உள்ளது. இதில் பெரும்பான்மையான பங்குதாரராக இருப்பது தமிழரான ஷிவ் நாடாரின் மகள் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா தலைமையில் இயங்கும் ஹெச்சிஎல் குழுமம் வைத்திருக்கப் போகிறது.
ஹெச்சிஎல், அதன் தலைமையகம் நொய்டாவில் இருப்பதால் உத்தரப்பிரதேசத்தில் இந்த புதிய தொழிற்சாலையை அமைக்க விரும்புவதாகவும், அம்மாநிலத்தில் ஹெச்சிஎல் குரூப்-பிற்கு வலுவான அனுபவம் கொண்டிருக்கும் காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேச அரசு செமிகண்டக்டர் துறையில் முதலீடு செய்பவர்களுக்குப் பல வகையில் ஊக்கத்தொகைகளை வழங்கி வருகிறது. மூலதனம் மற்றும் வட்டி மானியங்கள், நிலம் மற்றும் உள்கட்டமைப்பு என அள்ளிக்கொடுக்கிறது. இதனால் OSAT முதலீடுகளுக்கு மிகவும் ஏற்ற இடமாக உத்தரப்பிரதேசம் உருவெடுத்துள்ளது.
ஹெச்சிஎல் குழு - பாக்ஸ்கான் கூட்டணிக்கு இன்னும் மத்திய அரசிடம் இருந்து இந்திய செமிகண்டக்டர் மிஷன் (ISM) PLI திட்டத்தின் கீழ் மானியம் பெற அனுமதி பெறவில்லை. இதனால் நிலம் வாங்கியது குறித்தும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications