ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய ஒப்பந்த உற்பத்தியாளரான ஃபாக்ஸ்கான் நிறுவனம், தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் புதிய தொழிற்சாலையைக் கட்டி வருகிறது.
இந்த தொழிற்சாலையின் தொடக்கக் காலத்திலேயே சுமார் 25,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளதுடன், படிப்படியாக 1,00,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

ஃபாக்ஸ்கான் நிறுவனம் நேரடியாகவும், அதன் கிளை நிறுவனங்கள் வாயிலாகவும் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் என நாட்டின் பல நகரங்களில் தொழிற்சாலை அமைத்து ஆப்பிள் மற்றும் பல பிராண்டுகளின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரித்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வர்த்தகம் செய்து வருகிறது.
இந்த நிலையில் ஹைதரபாத் தொழிற்சாலையில் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஆப்பிள் நிறுவனத்தின் பிரபலமான "ஏர்போட்ஸ்" கருவி (AirPods) உற்பத்தி தொடங்கவுள்ளது. இது இந்தியாவில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்காக மேற்கொள்ளும் முதல் ஆடியோ கருவி உற்பத்தியாகும்.
தெலுங்கானா மாநிலத்தின் முதலீட்டு ஊக்கம் மற்றும் NRI விவகாரங்கள் துறையின் சிறப்புச் செயலாளர் விஷ்ணு ரெட்டி அண்மையில் அளித்த பேட்டியில், ஹைதராபாத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இரண்டு உற்பத்தி பிரிவுகள் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
முழு ஆலையையும் வெறும் ஒன்றரை வருடங்களில் கட்டி முடித்துள்ளனர். இது ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் ஆரம்பக்கட்ட கணிப்பான இரண்டரை வருடத்தைக் காட்டிலும் வேகமாகக் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்தார்.
2023 மார்ச் மாதம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லியு ஐதராபாத் நகரத்திற்கு நேரில் வந்து, தெலுங்கானா அரசுடனான ஒப்பந்த கடிதத்தில் கையெழுத்திட்டார். இதைத் தொடர்ந்து தொழிற்சாலை கட்டுமான பணிகள் துவங்கியது.
இதேவேளையில் பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள தேவனஹள்ளி பகுதியில், Foxconn நிறுவனத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மே மாதம் போராட்டத்தில் குதித்தனர்.
தேவனஹள்ளி பகுதி விவசாயிகள் கூறுகையில், நிலத்திற்கான உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும், வேளாண்மை நிலம் தங்களது வாழ்வாதாரம் என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் மிகப்பெரிய அளவிலான உற்பத்தி தளத்தை வைத்திருக்கும் பாக்ஸ்கான், சமீபத்தில் தனது உற்பத்தியை விரிவாக்கம் செய்யத் தென்னிந்தியாவில் பல மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்தது. அதன் அடிப்படையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் மாபெரும் தொழிற்சாலையை சுமார் 300 ஏக்கர் நிலத்தில் அமைக்க முடிவு செய்தது.
தமிழ்நாட்டில் உள்ள ஃபாக்ஸ்கான் (Foxconn) நிறுவனத்துடன் இணைந்து கூகுள் ஸ்மார்ட்ஃபோன்கள் தயாரிப்பதற்கும், ட்ரோன்கள் தயாரிப்பதற்குமான திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
இதன் மூலம் கூகுள் சென்னையில் பிக்சல் (Pixel) ஸ்மார்ட்ஃபோன்களின் உற்பத்தி, பிக்சல் 8 மாடலுடன் இந்தியாவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற கூகுள் ஃபார் இந்தியா (Google for India) மாநாட்டில் பிக்சல் ஃபோன்களின் உற்பத்தியை இந்தியாவில் தொடங்குவதற்கான திட்டங்களைக் கூகுள் முதன்முதலில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications