தைவான் நாட்டின் முன்னணி ஒப்பந்த உற்பத்தியாளர்களான பாக்ஸ்கான், தமிழ்நாட்டில் ஏற்கனவே அதிகப்படியான முதலீட்டைச் செய்துள்ள நிலையில் அடுத்தகட்ட தயாரிப்புகளுக்காக புதிய முதலீடுகளைச் செய்ய முடிவெடுத்துள்ளது.
பாக்ஸ்கான் தமிழ்நாட்டில் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே மாட்யூல்களுக்கான அசம்பிளி யூனிட்-ஐ அமைக்க தமிழ்நாட்டில் சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாக்ஸ்கான் முதல் முறையாக இந்தியாவில் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே மாட்யூல்களுக்கான அசம்பிளி யூனிட்-ஐ அமைக்கிறது என்பதால் இது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் டிஸ்ப்ளே மாடியூல் அதிகப்படியாக ஆப்பிளின் ஐபோனுக்கானதாக இருக்கும். இது சீனாவில் இருந்து ஆப்பிள் தயாரிப்பை இந்தியாவுக்கு மாற்றும் பாதையில் முக்கியமானதாக விளங்குகிறது.
மேலும் பாக்ஸ்கான் இந்த ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே மாட்யூல்களுக்கான அசம்பிளி யூனிட்-ஐ தனக்கான தொழிற்சாலையாக இல்லாமல் பிற உற்பத்தியாளர்களுக்கும் அளிக்க உள்ளது. அதாவது இந்தியாவில் செயல்படும் மற்ற எலக்ட்ரானிக்ஸ் ஒப்பந்த உற்பத்தியாளர்களான பெகாட்ரான், டாடா எலக்ட்ரானிக்ஸ் போன்றவையும் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் இருந்து டிஸ்ப்ளே மாட்யூல்களை வாங்க அனுமதிக்கிறது.
இதன் மூலம் சீனாவில் இருந்து அசம்பிளி செய்யப்பட்ட டிஸ்ப்ளே மாட்யூல்களை இறக்குமதி செய்வது பெரிய அளவில் குறையும், இறக்குமதி வர்த்தகத்தை மொத்தமாக இந்த தொழிற்சாலை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொழிற்சாலையை விரைவில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு வரும் காரணத்தால் தமிழ்நாடு அரசிடம் இருந்து விரைவில் தேவையான அனுமதிகளை வாங்கி பணிகளை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாக்ஸ்கான் இத்தொழிற்சாலைக்காக சென்னைக்கு அருகிலுள்ள தனது ஸ்மார்ட்போன் அசம்பிளி யூனிட்-க்கு அடுத்ததாக உள்ள ESR ஒரகடம் தொழில்துறை மற்றும் லாட்ஜிஸ்டிக்ஸ் பார்க்கில் சுமார் 500,000 சதுரடி நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ளது.
பாக்ஸ்கான் இந்தியாவில் கூகுள் பிக்சல் போன்களையும் அசம்பிளி செய்ய திட்டமிட்டுள்ளதால், புதிய தொழிற்சாலை ஐபோனுக்கு மட்டும் அல்லாமல் பிக்சல் போன்களுக்கும் டிஸ்ப்ளே யூனிட்-ஐ தயாரிக்கும். இது ஓரே கல்லில் ரெண்டு மாங்காய் கணக்காக உள்ளது.
பாக்ஸ்கான் இந்தியாவில் ஸ்மார்ட்போன் வணிகத்தை தாண்டி தற்போது தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் (ICT), எலக்ட்ரிக் வாகனங்கள் (EV), பேட்டரிகள், செமிகண்டக்டர் மற்றும் பல துறைகளிலும் இறங்கி மொத்தமாக எலக்ட்ரானிக்ஸ் சப்ளை செயினை உருவாக்கி வருகிறது.
இந்தியாவில் டிஸ்ப்ளே மாட்யூல்களின் இறக்குமதி என்பது அதிகப்படியான சீனாவில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படுகிறது. டிஸ்பிளே யூனிட் இறக்குமதியில் சில பிரிவில் 60-65% மற்றும் குறிப்பிட்ட சில பிரிவுகளில் சுமார் 90% வரை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
சீனாவை தொடந்து தென் கொரியா இரண்டாவது மிகப்பெரிய சப்ளையராக இருந்தாலும் இதன் பங்கீடு 20-25% அளவில் மட்டும் தான் இருக்கிறது. இந்த நிலையில் தான் பாக்ஸ்கான் உள்ளூர் டிமாண்ட்-ஐ கருத்தில் கொண்டு 1 பில்லியன் டாலர் முதலீட்டில் டிஸ்ப்ளே மாடியூல் அசம்பிளி தொழிற்சாலையை அமைக்கிறது.
டிஸ்ப்ளே மாட்யூல் பிரிவில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் பட்டியல் இதுதான்.. சாம்சங் டிஸ்ப்ளே (தென் கொரியா), BOE டெக்னாலஜி (சீனா), LG டிஸ்ப்ளே (தென் கொரியா), தியான்மா மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் (சீனா), AU ஆப்ட்ரானிக்ஸ் (தைவான்), மற்றும் ஜப்பான் டிஸ்ப்ளே இன்க் (ஜப்பான்).
தற்போது இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே மாட்யூல் அசம்பிளி நிறுவனங்கள் என்றால் பெரும்பாலானவை சீன நாட்டை சேர்ந்தது தான். திருப்பதியில் உள்ளஉள்ள TCL CSOT மற்றும் பாவல், ஹரியானாவில் உள்ள TXD (இந்தியா) டெக்னாலஜி ஆகிய நிறுவனங்கள் தான்.
இதில் CSOT சாம்சங் மற்றும் சியோமி பிராண்டுக்களுக்காக டிஸ்ப்ளே மாட்யூல்களை செய்து வருகிறது, அதேசமயம் TXD விவோ மற்றும் ஓப்போவுக்கு சேவை செய்து வருகிறது. மற்ற பிராண்டுகளுக்கு சீனாவில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications