உலகின் மிகப்பெரிய எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான் இந்தியாவில் பெரிய தொழிற்சாலை மற்றும் உற்பத்தி தளத்தை சென்னையில் அமைந்து உலக நாடுகளுக்கு தனது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வருகிறது. பாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடுகளை பெற 6 மாநிலங்கள் போட்டிப்போடு வரும் வேளையில் முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது
பாக்ஸ்கான் சென்னையில் உள்ள தனது உற்பத்தி வளாகத்தை கூடுதலாக விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. இந்த விரிவாக்கத்திற்காக தைவான் நாட்டின் பாக்ஸ்கான் நிறுவனம் ரூ.1,792 கோடி முதலீடு செய்ய உள்ளது. மேலும், இதன் மூலம் 1.24 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட உற்பத்தி தளம் சென்னை தொழிற்சாலையில் அதிகரிக்க உள்ளது.

இந்த விரிவாக்கம் மூலம் சுமார் 20,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளதால் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், வருமானமும் அதிகரிக்கும்.
ஏற்கனவே பாக்ஸ்கான் சென்னை மற்றும் மாநிலத்தில் பல பகுதிகளில் ஊழியர்களை பணியில் சேர்க்கும் நடவடிக்கையை துவங்கியுள்ளது. மேலும் பாக்ஸ்கான் ஆட்சேர்ப்பு பணியில் ஈடுப்பட்டு உள்ள ஒப்பந்த நிறுவனங்களுக்கு பாலினம், வயது வரம்பு, திருமணமானவர்களுக்கு வேலையில்லை என்பன போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க கூடாது என தெரிவித்துள்ளது.
பாக்ஸ்கான் நிர்வாகம் தற்போது இந்த 1.24 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட உற்பத்தி தளம் விரிவாக்கத்திற்கான ஒப்புதல்களுக்கு விண்ணப்பித்துள்ளது, குறிப்பாக சுற்றுசூழல் பாதுகாப்பு பாதுகாப்புக்கும் விண்ணப்பித்துள்ளது. இந்த விரிவாக்க பணிகள் முடிந்தால் சென்னை பாக்ஸ்கான் தொழிற்சாலையில் சுமார் 60000 பேர் பணியாற்றுவார்கள்.
பாக்ஸ்கான் சென்னையை தேர்வு செய்ததற்கான காரணங்கள்:
திறமையான தொழிலாளர்கள்: தமிழ்நாடு பொறியியல் மற்றும் உற்பத்தி துறைகளில் திறமையான தொழிலாளர்களைக் கொண்டுள்ளது. இது உயர் தொழில்நுட்ப உற்பத்தி செயல்பாடுகளுக்கு எளிதாக அதிகப்படியான தொழிலாளர்கள் கிடைக்கும் காரனத்தால் பாக்ஸ்கான் சென்னையில் தொடர்ந்து முதலீடு செய்கிறது.
அரசின் ஆதரவு: தமிழ்நாடு அரசு வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக சாதகமான கொள்கைகளை செயல்படுத்தி ஊக்கத்தொகைகளை வழங்கி வருவது தாண்டி, வெளிநாட்டு முதலீடுகள் அதிலும் குறிப்பாக தொழில்நுட்பம் சார்ந்த முதலீடுகளை வேகமாக செயல்படுத்துவதில் பாஸ்ட்டிராக் பிராசல் வைத்து. இது முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது.
ஏற்றுமதி முனையம்: இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் சென்னை அமைந்துள்ளதால் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுடன் பல்வேறு போக்குவரத்து மூலம் எளிதாக இணைக்கப்படுகிறது. இதற்கு ஏதுவாக சென்னையில்
உள்கட்டமைப்பு வசதிகள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் என லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின் செயல்பாடுகளில் சென்னை சிறந்து விளங்குகிறது.
சீனா +1 உத்தி: அமெரிக்கா - சீனா மத்தியிலான வர்த்தக போரின் காரணமாக சீனாவுக்கு மாற்றும் இடம் உருவாக்கும் பொருட்டு உலக நாடுகள் "சீனா +1" கொள்கையை கையில் எடுத்தது. இது பாக்ஸ்கான்-க்கும், சென்னை-க்கும் பெரிய அளவில் உதவியுள்ளது என்றால் மிகையில்லை.
பாக்ஸ்கான் நிறுவனத்தின் 1,792 கோடி ரூபாய் முதலீட்டில் திட்டமிடப்பட்டு உள்ள விரிவாக்க திட்டம் முழுமையாக செயல்படும் போது, சென்னை பாக்ஸ்கான் கேம்பஸ்-ல் ம
மட்டும் சுமார் 60,000 தொழிலாளர்கள் பணியாற்றுவார்கள்.
இதன் மூலம் சென்னை பாக்ஸ்கான் தொழிற்சாலை இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்திக்கான ஒரு முக்கிய மையமாக மாறும். இந்த விரிவாக்கம் Foxconn-க்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டு பொருளாதார மற்றும் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கும்.


Click it and Unblock the Notifications