தைவான் நாட்டின் பாக்ஸ்கான் சீனாவில் இருந்து உற்பத்தி தளத்தை இந்தியாவுக்கு தொடர்ந்து மாற்றி வரும் வேளையில், தெலுங்கானா-வை தொடர்ந்து கர்நாடகாவில் சுமார் 967.91 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்ய பாக்ஸ்கான் முடிவு செய்துள்ளது.
பாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்த 8000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டுக்கு கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இப்புதிய முதலீட்டின் வாயிலாக கர்நாடகா மாநிலத்தில் 50000 வேலைவாய்ப்புகள் உருவாக்கும் வாய்ப்புகள் உள்ளது எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் பாக்ஸ்கான் தரப்பில் இருந்து இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை என ரெயூட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
பாக்ஸ்கான்
உலகின் மிகப்பெரிய ஒப்பந்த எலக்ட்ரானிஸ் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கான், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய கூட்டணி நிறுவனமாக உள்ளது. பாக்ஸ்கான் இல்லையெனில் ஆப்பிள் இல்லையென்ற நிலை தான், இந்த நிலையில் அமெரிக்கா - சீனா வர்த்தக போர் காலத்தில் சீனாவில் இருந்து ஆப்பிள் தனது உற்பத்தி தளத்தை தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மாற்ற முடிவு செய்தது.
ஆப்பிள் - பாக்ஸ்கான் கூட்டணி
இந்த முடிவின் படி ஆப்பிள் - பாக்ஸ்கான் கூட்டணி மட்டும் அல்லாமல் ஆப்பிள் நிறுவனத்தின் பெரும்பாலான உற்பத்தி கூட்டணி நிறுவனங்களும் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்து தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. ஆனால் பாகிஸ்தான் அமெரிக்கா - சீனா வர்த்தக போருக்கு முன்பே சென்னை தொழிற்தசாலை மூலம் சியோமி உட்பட பல பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்து வந்தது.
ஆப்பிள் ஏர்பாட்
சமீபத்தில் பாக்ஸ்கான் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட் தயாரிக்கும் ஒப்பந்தத்தை கைப்பற்றியது. இதற்காக தனி தொழிற்சாலவையை அமைக்க முடிவு செய்து இடத்தை தேடி வந்தது. இதற்கிடையில் தான் பாக்ஸ்தான் தலைவர் மற்றும் உயர்மட்ட நிர்வாக குழு இந்தியாவுக்கு வந்தது.
300 ஏக்கர்
பாக்ஸ்கான் நிறுவனத்தின் தாய் நிறுவனமான Hon Hai Precision Industry ஐபோன் உதிரிபாகங்களுக்காக பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் சுமார் 300 ஏக்கரில் பிரம்மாண்ட தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியானது.
பெங்களூர் தொழிற்சாலை
பாக்ஸ்கான் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளின் இந்திய பயணத்தில் இந்த பெங்களூர் தொழிற்சாலைக்காக 700 மில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியானது. இந்த மாபெரும் திட்டம் உறுதியாகும் பட்சத்தில் இதுதான் அதிகப்படியான சிங்கிள் இன்வெஸ்ட்மெனட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எலக்ட்ரிக் வாகன உற்பத்தி
பாக்ஸ்கான் ஆப்பிள், சியோமி போன்ற பல முன்னணி பிராண்டுகளுக்கு எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை தயாரித்து கொடுக்கிறது. அந்த வகையில் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. பாக்ஸ்கான் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி சந்தைக்குள் வருவது என்பது மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவது மட்டும் அல்லாமல் போதுமான கார்களை தயாரிக்க முடியாமல் மாட்டிக்கொண்டு இருக்கும் நிறுவனங்களுக்கு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications