சென்னை: ஆப்பிள் நிறுவனத்துக்கு ஐபோன்களை தயாரித்து வழங்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம், தங்களுக்கு ஆட்களை வேலைக்கு தேர்வு செய்து வழங்கும் நிறுவனங்களுக்கு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
தைவான் நாட்டை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு தேவையான ஐபோன்களை தயாரிக்கும் ஆலையை தமிழ்நாட்டில் நிறுவியுள்ளது. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இந்த ஆலை இந்தியாவில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பிரதான ஆலை ஆகும். கடந்த ஜூன் மாதம் ராய்ட்டர்ஸ் நிறுவனம் ஒரு ஆய்வு அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டது. அதில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தங்களுடைய ஆலையில் திருமணம் முடித்த பெண்களுக்கு பணி வழங்க மறுப்பதாக தெரிவித்திருந்தது.

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்த வேலைவாய்ப்பு கொள்கை பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில் இந்தியாவில் தங்கள் நிறுவனத்திற்கு வேலைக்காக ஆட்களை தேர்வு செய்து வழங்கும் நிறுவனங்களுக்கு ஃபாக்ஸ் கான் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளதாம். ஐபோன் பாகங்களை ஒருங்கிணைக்கும் தங்களின் ஆலைகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான விளம்பரங்களில் குறிப்பிட்ட சில வார்த்தைகள் இடம்பெறக்கூடாது என கூறியுள்ளதாம்.
முகவர்கள் ஃபாக்ஸ்கான் நிறுவன வேலைக்கான விளம்பரங்களில் தேவைப்படும் வேலையாட்களின் வயது பாலினம் மற்றும் திருமண நிலை ஆகியவற்றை குறிப்பிடக் கூடாதாம். குறிப்பாக ஃபாக்ஸ்கான் என்ற பெயரை விளம்பரத்தில் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டிருக்கிறது.
ராய்ட்டர்ஸ் நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் 25ஆம் தேதி ராய்ட்டர்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் இயங்கி வரும் ஃபாக்ஸ்கான் ஆலைகளில் ஒரு ஆய்வினை நடத்தி திருமணமான பெண்களுக்கு பணி வாய்ப்பு மறுக்கப்படுகிறது என கூறியது.

இது ஃபாக்ஸ்கான் ஆலைக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி தந்தது. இந்த நிலையில் ஃபாக்ஸ்தான் நிறுவனம் தங்களுக்கு ஆட்களை தேர்வு செய்து வழங்கக்கூடிய முகவர்களுக்கு கடுமையான வழிமுறைகளை அனுப்பியுள்ளது.
இந்த விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என தெரிவித்திருக்கிறதாம். அது மட்டும் இன்றி திருமணமாகாதவர்களுக்கு மட்டுமே வேலை, குறிப்பிட்ட வயதினருக்கு மட்டுமே வேலை, ஆண் அல்லது பெண்களுக்கு மட்டுமே வேலை என்பன உள்ளிட்ட வார்த்தைகள் விளம்பரத்தில் இடம்பெறக் கூடாது என இந்த முகவர்களுக்கு வாய் மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனிடையே ராய்ட்டர்ஸ் நிறுவனம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு ஆட்களை வேலைக்கு தேர்வு செய்து வழங்கும் சில முகவர்களின் விளம்பரங்களை ஆய்வு செய்துள்ளது. அதில் " ஏசி பணியிடம், இலவச போக்குவரத்து வசதி, கேண்டீன் வசதி, இலவச தங்குமிடம், மாத சம்பளம் 14 , 974 ரூபாய் " என மட்டுமே விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறது.
தன்னுடைய பெயரும், தங்களின் கிளைண்ட்டான ஆப்பிள் நிறுவனத்தின் பெயரும் களங்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே ஃபாக்ஸ் கான் இவ்வாறு நடவடிக்கை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications