இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு தளத்தை அமைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு தீவிரமாக இருக்கும் வேளையில், இதற்காக சரியான தொழில்நுட்ப கூட்டணியை பெறுவது பெரும் சுமையாக இருக்கும் வேளையில் இதில் ஆர்வமாக இருக்கும் நிறுவனங்களும் கடுமையான பிரச்சனைகளை எதிர்கொண்டு உள்ளது.
இந்த நிலையில் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமமான வேதாந்தா உடன் கூட்டணி சேர்ந்து இந்தியாவில் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்பிளே கிளாஸ் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்கும் திட்டத்தை கையில் எடுத்தது. ஆனால் ஒரு வருடத்தில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லாமல் இருந்த காரணத்தால் இதில் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் பாக்ஸ்கான் - வேதாந்தா கூட்டணி தனித்தனியாக தனது செமிகண்டக்டர் முயற்சிகளை கையில் எடுக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வரும் வேளையில், தற்போது தைவான் நாட்டின் எப்படியாவது செமிகண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என்பதற்காக புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளது.
பாக்ஸ்கான் டெக்னாலஜி குழுமம் STMicroelectronics NV உடன் இணைந்து, இந்தியாவில் செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைத்து தெற்காசியாவில் அதன் தடத்தை விரிவுபடுத்துவதற்கு இந்திய அரசின் ஆதரவை நாடுகிறது.
தைவான் நாட்டின் Foxconn மற்றும் பிரான்ஸ்-இத்தாலி நாட்டை சேர்ந்த STMicro ஆகியவை 40-நானோமீட்டர் சிப் ஆலையை அமைக்க மத்திய அரசின் ஆதரவிற்கு விண்ணப்பித்துள்ளன. இந்த கூட்டணியும், அரசிடம் அனுமதி குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவிலஸ்லை.
40-நானோமீட்டர் செமிகண்டக்டர் சிப்களை கார்கள், கேமராக்கள், பிரிண்டர்கள் மற்றும் பலதரப்பட்ட இயந்திரங்களில் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. STMicro உடன் கூட்டு சேர்வதன் மூலம், Foxconn ஒரு சிப்-தொழில் முன்னோடியின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி லாபகரமான அதேநேரம் அதிக டிமாண்ட் உள்ள வணிகத்திற்குள் நுழைய உள்ளது.
இந்தியாவின் பிரபல உலோக நிறுவனமான வேதாந்தாவுடன் ஃபாக்ஸ்கானின் முந்தைய முயற்சியின் தோல்வியானது, புதிய செமிகண்டக்டர் ஆலைகளை அமைக்க தேவையான தொழில்நுட்ப உதவிகளை பெறுவது எவ்வளவு கடினம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
புதிய செமிகண்டக்டர் ஆலைகளை அமைக்க பெரிய அளவிலான இட வசதிகள், பல பில்லியன் டாலர்கள் செலவாகும் மற்றும் இயங்குவதற்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நிபுணத்துவம் கொண்ட குழுவும் நிர்வாகமும் தேவைப்படுகிறது. அனைத்திற்கும் மேலாக செமிகண்டக்டர் சிப் தயாரிப்புக்கு தேவையான இயந்திரங்கள், கருவிகளை சில நாடுகளின் நிறுவனங்கள் மட்டுமே கடுமையான ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்த நிலையில் பாக்ஸ்கான் அல்லது வேதாந்தா சிப் தயாரிப்பில் இதற்கு முன்பு அனுபவத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதே கூட்டணி முறிவிற்கும், தாமத்திற்கும் முக்கியமான காரணம். மேலும் உற்பத்திக்கு தயாராக உள்ள சிப் தொழில்நுட்பத்துடன் ஒரு கூட்டாளரைக் கண்டுபிடிப்பதில் தாமதம் மற்றும் அரசு மானியங்களுக்கான ஒப்புதல்களைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் அவர்களின் கூட்டணி உடைந்தது.
STMicro உடனான அதன் கூட்டாண்மை பற்றிய கூடுதல் விவரங்களுக்கு பாக்ஸ்கான் நிறுவனத்திடம் மத்திய அரசு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டணி உறுதி செய்யப்படும் பட்சத்தில் பாக்ஸ்கான் கூட்டணி வெற்றிகரமான சிப் தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ளும்.


Click it and Unblock the Notifications