இந்தியாவை தனது வீடாக மாற்றியிருக்கும் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் அடுத்தடுத்து முதலீடுகளை செய்து தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடாக என தென்னிந்திய மாநிலங்களிள் தொழிற்சாலைகளை அமைத்து வருகிறது.
இதன் மூலம் பாக்ஸ்கான் மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் மூலம் அடுத்த 10 வருடத்தில் குறைந்தது 1.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாக்ஸ்கான டெக்னாலஜி குரூப் சென்னையில் தனது சொந்த லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான Jusda-வின் முதல் இந்திய கிளையை சென்னையில் திறக்கப்பட்டு உள்ளது.

Jusda நிறுவனம் தான் பாக்ஸ்காண் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சப்ளை செயின் மேனேஜ்மென்ட் நிறுவனமாகும். Jusda நிறுவனத்தின் இந்திய கிளைய திறப்பது புகைப்படத்துடன் பாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்திய உறுப்பினரான வி லீ தனது லின்கிடுஇன் பக்கத்தில் பதிவிட்டார்.
இந்தியாவில் லாஜிஸ்டிக்ஸ் வர்த்தகம் சிறப்பான வளர்ச்சி பாதையில் இருப்பதை உணர்ந்து Jusda திறக்கப்பட்டு உள்ளதாகவும் இதர்காக தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் DPIIT, MEITY ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்தார் லீ.

Jusda சப்ளை செயின்எ மேனேஜ்மென்ட் பிரிவில் சுமார் 20 வருட அனுபவத்தை கொண்டு உள்ளது, உற்பத்தி துறைக்கு தேவையான அனைத்து லாஜிஸ்டிக்ஸ் சேவைகளையும் Jusda அளிக்கிறது. உற்பத்தி துறைக்கு தேவையான உற்பத்தி பொருட்கள் முதல் தயாரிக்கப்பட்ட பொருட்களை பெற்று ஏற்றுமதி செய்து மக்களுக்கு விற்கப்படும் முனையம் வரையில் Jusda சேவை அளிக்கிறது.
Jusda தற்போது 3000 3C நிறுவனங்களிடம் இணைந்து பணியாற்றி வருகிறது. 3C என்பது கம்பியூட்டர், கம்யூனிகேஷன் மற்றும் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் என்பது பொருள்.
Jusda இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு தனது வர்த்தகத்தை துவங்கி தற்போது 100 ஊழியர்கள் உடன் 15 கிடங்குகளை நிர்வாகம் செய்து வருகிறது. Jusda இந்தியாவில் சப்ளை செயின் மேனேஜ்மென்ட், சர்வதேச சரக்கு மேனேஜ்மென்ட், ஆர்டர் புல்பிள்மென்ட், மொபைல் ரோடு டிரான்ஸ்போர்டேஷன், B2B டெலிவரி, கிராஸ் பார்டர் ஈகாமர்ஸ் சேவைகளை அளித்து வருகிறது.


Click it and Unblock the Notifications