Foxconn: சென்னையில் புதிய தொழிற்சாலை.. $200 மில்லியன் முதலீடு.. பெரிய ஏமாற்றம், ஏன்..?!

தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை தயாரிக்கும் தொழிற்சாலை வைத்திருக்கும் பாக்ஸ்கான் கடந்த 2 வருடத்தில் இந்தியாவில் இருந்து தனது உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க பல விரிவாக்க திட்டங்களை அறிவித்து. சென்னை பாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு அருகில் மாபெரும் ஹாஸ்டல், தொழிற்சாலை விரிவாக்கம், புதிய ஒப்பந்த ஊழியர்கள் என பல விஷயங்களை செய்தது.

சமீபத்தில் பாக்ஸ்கான் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் சுமார் 300 ஏக்கர் நிலத்தில் மாபெரும் தொழிற்சாலையை அமைக்கும் திட்டத்தை கையில் எடுத்தது, இத்திட்டத்திற்கான நிலத்தை கையகப்படுத்துவதற்குள், கர்நாடகாவில் 2வது தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை அறிவித்தது.

Foxconn: சென்னையில் புதிய தொழிற்சாலை.. $200 மில்லியன் முதலீடு.. பெரிய ஏமாற்றம், ஏன்..?!

பாக்ஸ்கான் நிறுவனம் கர்நாடகாவின் தும்கூர் (Tumkur) பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் 8800 கோடி ரூபாய் முதலீட்டில் போனுக்கான ஸ்கிரீன் மற்றும் ஸ்கிரீனுக்கான் வெளிப்புற மெக்கானிக்கல் பகுதிகள் தயாரிக்க 2வது தொழிற்சாலை அமைக்க உள்ளது. இதற்காக கர்நாடக முதல்வர், ஐடி துறை அமைச்சர் ஆகியோரை FII நிறுவனத்தின் சிஇஓ செங்க் சந்தித்து ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த நிலையில் தான் கடந்த வாரம் பாக்ஸ்கான் இன்டஸ்ட்ரியல் இன்டர்நெட் என்னும் FII நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அதன் சிஇஓ பிராண்ட் செங் ஆகியோர் அடங்கிய குழு இன்று தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பின்பு எவ்விதமான அறிவிப்புகளும் வெளியாகாத நிலையில் தற்போது ரெயூட்டர்ஸ் முக்கியமான தகவல்-ஐ வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பில் FII நிறுவனம் 180 முதல் 200 மில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டில் உதிரிபாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை முன்வைக்கப்பட்டதாகவும், இத்தொழிற்சாலையை 2024ஆம் ஆண்டுகள் கட்டி முடிந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளது.

இத்தொழிற்சாலைக்கு 200 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட உள்ள நிலையில் எதிர்காலத்திலும் முதலீடுகளை செய்யப்படவும் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என கூறப்பட்டதாக ரெயூட்டர்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு அரசும் சரி, பாக்ஸ்கான் தரப்பில் இருந்தும் சரி இதுகுறித்த இறுதி முடிவுகளை இன்னும் அறிவிக்கவில்லை.

கர்நாடகாவின் தும்கூர்-ல் உதிரிபாகங்களுக்காக அமைக்கப்படும் தொழிற்சாலையை 8800 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்படுவதை ஒப்பிடும் போது, சென்னையில் வெறும் 1600 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலை குறித்து முதல்வர் ஸ்டாலின் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பலருக்கு உதிரிபாகங்கள் தொழிற்சாலை பெரும் ஏமாற்றம் தான்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+