கர்நாடகா, தமிழ் நாட்டில் தைவானின் பாக்ஸ்கான் நிறுவனம் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் மீண்டும் கர்நாடக அரசுடன் பாக்ஸ்கான் நிறுவனம் தீவிர பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
Hon Hai Technology Group (Foxconn) தலைமையகத்தில், இந்த முதலீட்டு திட்டம் குறித்து தீவிரவாக விவாதித்து வருகிறோம்.
இது விரைவில் பலனை அளிக்கலாம் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
முழு விவரங்கள் வெளியாகவில்லை
எனினும் இந்த திட்டத்தில் எவ்வளவு முதலீடு? ஏற்கனவே இருக்கும் ஆலை விரிவாக்கம் செய்யப்படுமா? அல்லது மீண்டும் புதியதாக ஒரு ஆலை கட்டப்படுமா? என்பது குறித்தான விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.
ஆந்திரா & தமிழ் நாடு
தைவானை தலைமையகமாக கொண்ட பாக்ஸ்கான் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றது. இது உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஆப்பிள் நிறுவனம் மற்றும் அமேசான்.காம் நிறுவனத்திற்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்கிறது.
சீனா - ஐபோன்
சீனாவில் மிகப்பெரிய பிரம்மாண்ட ஆலையை கொண்டுள்ள பாக்ஸ்கான், சமீபத்திய காலமாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது. இதற்கிடையில் சீனாவுக்கு வெளியே தனது உற்பத்தியினை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தியினை படிப்படியாக உயர்த்தி வருகின்றது.
சீனாவுக்கு வெளியே உற்பத்தி
சீனாவில் நிலவி வரும் பிரச்சனைகளுக்கு மத்தியில் பல்வேறு நிறுவனங்களும், சீனாவுக்கு வெளியே தங்களது உற்பத்தியினை தொடங்கி வருகின்றன. பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் பாக்ஸ்கான் நிறுவனம் தொடர்ந்து தனது உற்பத்தியினை ஏற்கனவே சீனாவுக்கு வெளியே தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உற்பத்தி துறை
இது கர்நாடகாவில் வேலை வாய்ப்பினை அதிகரிக்க உதவும் எனலாம். கர்நாடகா சிறந்த டெக் என்பதை தொடர்ந்து தற்போது உற்பத்தியினை தொடர்ந்து அதிகரிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இது மேற்கொண்டு கர்நாடகாவை உற்பத்தி துறையிலும் மேம்படுத்த உதவலாம்.


Click it and Unblock the Notifications