கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 10-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது, இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்க உள்ளது. இதற்கிடையில் பல முன்னணி கட்சிகளில் பிரபலமானவர்களுக்கும், மூத்த தலைவர்களுக்கும் சீட் கொடுக்காத நிலையில் பிரச்சனைகள் வெடிக்க துவங்கியுள்ளது.
இந்திய நிலையில் தைவான் நாட்டின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கானின் தாய் நிறுவனமான Hon Hai Technology Group பெங்களூர் சர்வதேச விமான நிலைத்திற்கு அருகில் அடுத்த மாதம் முதல் தனது மாபெரும் போன் உற்பத்தி தொழிற்சாலையை கட்டும் பணிகளை துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான மாநிலத்தின் உயர்மட்ட கிளியரென்ஸ் கமிட்டி மார்ச் 22 ஆம் தேதி சுமார் 8000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் கிரீன்பீல்ட் தொழிற்சாலைக்கான ஒப்புதலை தேர்தல் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பே ஒப்புதல் அளித்துள்ளது.
பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பாக்ஸ்கான் இந்தியாவிலேயே மிகப்பெரிய தொழிற்சாலையை அமைக்கப்பட உள்ளது. இந்த தொழிற்சாலை மூலம் அடுத்த 5 வருடத்தில் பாகிஸ்கான் தொழிற்சாலை சார்ந்து குறைந்தது 50000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
தற்போது ஒப்புதல் கிடைக்கப்பட்ட நிலையில் மே மாதம் முதல் கார்நாடக அரசு வழங்கியுள்ள 300 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொழிற்சாலையில் பாகிஸ்கான் ஐபோன் மற்றும் பிற முக்கியமான எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை உற்பத்தி செய்யவும், அசம்பிள் செய்யவும் உள்ளது.
ஏற்கனவே வெளியான தகவல் படி பாகிஸ்கான் இந்த தொழிற்சாலை எலக்ட்ரிக் கார்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் என கூறப்பட்டது. இதுக்குறித்து உறுதியான தகவல் வெளியாகிவில்லை. ஆனால் பாக்ஸ்கான் ஏற்கனவே எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

பாக்ஸ்கான் சீனாவில் இருந்து உற்பத்தி தளத்தை இந்தியாவுக்கு தொடர்ந்து மாற்றி வரும் வேளையில், தெலுங்கானா-வை தொடர்ந்து கர்நாடகாவில் சுமார் 967.91 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்ய பாக்ஸ்கான் முடிவு செய்ததை தொடர்ந்து வெறும் 60 நாட்களில் வேக வேகமாக ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications