தமிழ்நாட்டின் பொருளாதாரம் 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் அளவீட்டைத் தொட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் தமிழக அரசு பல துறையில் முதலீடுகளை ஈர்ப்பது மட்டும் அல்லாமல் பல புதிய கொள்கை மற்றும் திட்டங்களை அரசு தொடர்ந்து அறிவித்து வருகிறது.
இதன் வாயிலாகத் தினமும் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி தளத்தை அமைக்கவும், அலுவலகத்தைத் திறக்கவும் ஆர்வம் காட்டி வரும் வேளையில், சமீபத்தில் ஆசிய பசிபிக் பகுதியில் முன்னிலையில் இருக்கும் ரியல் எஸ்டேட் சேவை மற்றும் முதலீட்டு நிறுவனமான ESR குழுமம், சென்னை ஒரகடத்தில் உள்ள தனது தொழில்துறை மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பூங்காவை விரிவாக்கம் செய்வதற்காகக் கூடுதலாக 27 ஏக்கர் நிலத்தைப் பகுதியில் வாங்கியது.

தற்போது இதே ESR குழுமம், காஞ்சிபுரம் வாலாஜாபாத்தில், மொபைல் போன்களுக்கான என்குளோசிங் மற்றும் கேசிங்க்களை உற்பத்தி செய்யும் மாபெரும் தொழிற்சாலை அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதிக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளது. இந்தத் தொழிற்சாலை, பெரும்பாலும் தைவான் நாட்டின் பிரபல ஒப்பந்த உற்பத்தியாளரான பாக்ஸ்கான் நிறுவனத்திற்காக உருவாக்கப்பட வாய்ப்புள்ளது.
இது தமிழ்நாட்டின் மின்னணு உற்பத்தித் துறையில் புதிய மைல் கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொழிற்சாலை திட்டத்தின் முக்கிய விவரங்களை பார்க்கும் போது, சுமார் 60 ஏக்கர் பரப்பளவில், 12,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக, 2,95,925 சதுர மீட்டர் அளவிலான கட்டமைப்பில் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இங்குத் தொழிலாளர் குடியிருப்பு வசதிகளும் அடங்கும் எனத் தெரிகிறது.
ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஏற்கனவே இந்த பகுதியில் தொழிற்சாலை அமைப்பதற்காக 5,50,000 சதுர அடி பரப்பளவிலான இடத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் கையெழுத்திட்ட ரூ.1,600 கோடி மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் உதிரிப்பாகங்கள் உற்பத்திக்கான திட்டம் இதுவாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய தொழிற்சாலை அமையவிருப்பது தமிழ்நாட்டின் மின்னணு உற்பத்தித் துறையில் ஒரு முக்கியமான மைல் கல்லாகும். இதன் மூலம், ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பதுடன், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும்.
இதேபோல் சென்னையில் முதலீடு செய்யும் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் தனது தயாரிப்புகளை விற்கவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இலக்குடன் முதலீடு செய்வதால் சென்னை சிறந்த தேர்வாக உள்ளது. இதேபோல் தூத்துக்குடி மற்றும் ஓசூர்-ம் அடுத்த உற்பத்தி தளத்திற்கான தேர்வாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications