தைவான் நாட்டின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான் கடந்த 2 வருடத்தில் செமிகண்டக்டர் உற்பத்தி, எலக்ட்ரிக் வாகன உற்பத்தி துறையில் இறங்க முடிவு செய்தது. இதில் முக்கியமாக குஜராத்தில் வேதாந்தா குழுமத்துடன் இணைந்து பாக்ஸ்கான் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பில் இறங்க முடிவு செய்து அதற்காக கூட்டணி அமைத்தது.
பல மாத போராட்டங்களுக்கு பின்பு மத்திய அரசிடம் இருந்து மானியம் பெற முடியாத காரணத்தால் வேதாந்தா உடனான கூட்டணியை உடைந்து பாக்ஸ்கான் தனியாக செமிகண்டக்டர் ஃபேபிரிகேஷன் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளது. கூட்டணியை உடைந்த அடுத்த நாளே மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை, இப்போ தைவான், ஜப்பான் நிறுவனங்கள் கூட்டணி..

பாக்ஸ்கான் நிறுவனம் தற்போது தைவான் நாட்டின் மிகப்பெரிய செமிகண்டக்டர் நிறுவனமாக இருக்கும் TSMS உடனும், ஜப்பான் நாட்டின் TMH குரூப் உடனும் தொழில்நுட்ப உதவிக்காகவும், கூட்டணி நிறுவனத்தை உருவாக்கி இந்தியாவில் தொழிற்சாலைகளை அமைக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தைவான் நாட்டை சேர்ந்த TSMC உலகிலேயே மிகப்பெரிய செமிகண்டக்டர் ஃவேபர்கள் தயாரிக்கும் Foundry கொண்டு உள்ளது. இதில் ஜப்பான் நாட்டின் TMH குரூப் செமிகண்டக்டர் சிப் தயாரிக்கும் கருவிகளை ஆப்பேட் மற்றும் மெயின்டெயின் செய்யும் பணிகளை செய்கிறது.
இந்த நிலையில் பாக்ஸ்கான் - TSMC - TMH ஆகிய 3 மாபெரும் கூட்டணியின் இந்தியாவில் தொழிற்சாலை அமைத்தால், அடுத்த 20 வருடத்தில் செமிகண்டக்டர் உற்பத்தியில் இந்தியா முக்கிய இடத்தை பிடிக்கும். இதன் மூலம் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் புதிய உச்சத்தை எளிதாக தொட முடியும்.
பாக்ஸ்கான் மத்திய அரசிடம் இந்தியாவில் குறைந்தது 4 முதல் 5 செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் உற்பத்தி லைன்களை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. மத்திய அரசிடம் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் இந்தியாவில் செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் உற்பத்தி தளத்தை அமைக்க குறைந்தது 2 புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பாக்ஸ்கான் அமைக்க திட்டமிட்டு உள்ள 4 முதல் 5 செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் உற்பத்தி லைன்களில் குறைந்தது 1 குஜராத்தில் அமைக்கப்படும். மற்ற 3 நாட்டின் வேறு பகுதிகளில் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications