இந்தியா உலகின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி ஹப் ஆக மாற வேண்டும் என்ற திட்டத்தில் மிகவும் ஆர்வமாக இருக்கும் வேளையில், ஐபோன் தயாரிப்பை இந்தியாவில் வேகப்படுத்த ஆப்பிள் மற்றும் அதன் சக உற்பத்தி கூட்டணி நிறுவனங்களும் தீவிரமாக உள்ளது.
அமெரிக்கா - சீனா மத்தியிலான வர்த்தக போரின் காரணமாக சீனாவில் இருந்து படிப்படியாக பெரும் பகுதி உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்றியுள்ள ஆப்பிள்-க்கு உதிரிபாகங்களை உள்நாட்டில் தயாரிப்பதில் பெரும் பிரச்சனை உருவாகியுள்ளது.
ஐபோனுக்கான உதிரிபாகங்களை செய்ய டாடா குழுமத்திடம் ஆப்பிள் ஒப்பந்தம் செய்து இந்தியாவில் இருக்கும் ஐபோன் அசம்பிள் தொழிற்சாலைகளுக்கு அனுப்ப திட்டமிட்டு இருந்தது. ஆனால் டாடா தொழிற்தசாலையில் தயாரிப்புகளின் தரம் குறைவாக இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த நிலையில் தைவான் நாட்டை சேர்ந்த பாக்ஸ்கான் பெங்களூரில் சுமார் 300 ஏக்கரில் புதிய தொழிற்சாலையை அமைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாக்ஸ்கான்
பாக்ஸ்கான் நிறுவனத்தின் தாய் நிறுவனமான Hon Hai Precision Industry ஐபோன் உதிரிபாகங்களுக்காக பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் சுமார் 300 ஏக்கரில் பிரம்மாண்ட தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூர்
இந்த இடத்தில் பாக்ஸ்கான் பல பிரிவுகளுக்காக பயன்படுத்த உள்ளது, முக்கியமாக ஐபோன் உதிரிபாகங்களுக்கான தொழிற்சாலை அமைக்கப்பட்டாலும் ஐபோன் அசம்பிளி தளம் அமைக்கவும் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. இதேபோல் பாக்ஸ்கான் இந்த 300 ஏக்கரில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரிபாகங்களையும் தயாரிக்க திட்டமும், ஆலோசனை செய்தும் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
700 மில்லியன் டாலர்
மேலும் பாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்திய பயணத்தில் இந்த பெங்களூர் தொழிற்சாலைக்காக 700 மில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாபெரும் திட்டம் உறுதியாகும் பட்சத்தில் இதுதான் அதிகப்படியான சிங்கிள் இன்வெஸ்ட்மெனட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கானா மாநிலம்
பாக்ஸ்கான் எலக்ட்ரானிக்ஸ் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் அதன் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கும் ஒப்பந்தமானது தெலுங்கானவின் பிரகதி பவனில் மார்ச் 2 அன்று தெலுங்கான முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் மற்றும் பாக்ஸ்கான் தலைவர் யங் லியு ஆகியோர் முன்னிலையில் Hon Hai Technology Group மற்றும் தெலுங்கானா அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
இந்த ஒப்பந்தம் மூலம் தெலுங்கானாவில் 10 ஆண்டுகளில் சுமார் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு இருக்கும் என தெலுங்கானா மாநில முதலமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது. பாக்ஸ்கான் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையை அமைக்க எவ்வளவு பணம் முதலீடு செய்யப்படவுள்ளது என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications