தைவான் நாட்டின் பாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் அதன் செயல்பாட்டை விரிவுபடுத்தும் முயற்சியில் செமிகண்டக்டர் உற்பத்திக்கான தொழிற்சாலையை அமைக்கத் தனியாக விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளது என்று நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை பாக்ஸ்கான் நிறுவனம் குஜராத்தில் பெரும் செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்க வேதாந்தா உடன் அமைக்கப்பட்ட கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் இத்திட்டத்தில் இருந்து விலகாமல் தொடர்ந்து தனியாகத் தொழிற்சாலை அமைக்கும் முடிவை எடுத்துள்ளது.

இதற்காக பாக்ஸ்கான் மத்திய அரசிடம் தனிப்பட்ட முறையில் செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்க விண்ணப்பம் கொடுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதேவேளையில் இப்பிரிவில் சரியான கூட்டணி நிறுவனங்களையும் தேடி ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
செமிகண்டக்டர்கள் மற்றும் டிஸ்ப்ளே ஃபேப் எகோசிஸ்டம்-ஐ இந்தியாவில் அமைப்பதற்கான மாற்றியமைக்கப்பட்ட திட்டம் குறித்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க பாக்ஸ்கான் பணியாற்றி வருகிறது. இதேவேளையில் இப்பிரிவில் எங்களுக்கு ஏதுவான கூட்டணி நிறுவனத்தையும் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம் என்று பாக்ஸ்கான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாக்ஸ்கான் தனியாக முதலீடு செய்கிறது அல்லது கூட்டணியில் தனது ஆதிக்கம் அதிகமாகக் கொண்டு செமிகண்டக்டர்கள் மற்றும் டிஸ்ப்ளே ஃபேப் எகோசிஸ்டம் வருகிறது என்றால் சென்னை அல்லது தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு வரும் வாய்ப்புகள் அதிகம். இல்லையெனில் தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு வர வாய்ப்புகள் உள்ளன.
சமீபத்தில் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் தான் அதிகப்படியான முதலீடுகளையும், புதிய திட்டங்களையும் செயல்படுத்தும் முயற்சியில் உள்ளது. இதனால் பாக்ஸ்கான் தென்னிந்தியாவில் தனது புதிய செமிகண்டக்டர்கள் மற்றும் டிஸ்ப்ளே ஃபேப் தொழிற்சாலையை அமைக்க 80:20 வாய்ப்பு உள்ளது.
இந்தியாவில் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்பிளே தொழிற்சாலைகளை அமைக்கும் திட்டத்தில் வேதாந்தா - பாக்ஸ்கான் கூட்டணி தோல்வி அடைந்தாலும், பாக்ஸ்கான் இத்துறை முதலீட்டில் இருந்து வெளியேறவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகியிருக்கும் வேளையில் கூட்டணி என்ற அடுத்த சேப்ட்ரை திறந்துள்ளது.

இந்தியாவில் செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை பாக்ஸ்கான் அறிவித்த உடன் முதலில் அணுகியது தமிழ்நாடு அரசு தான். பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் பாக்ஸ்கான் தனது செமிகண்டக்டர் தொழிற்சாலையை அமைக்க வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.
இதேவேளையில் டாடா குழுமம் OSAT தொழிற்சாலையை அமைக்கத் திட்டமிட்டு உள்ளது. சில வாரங்களுக்கு முன்பு திருச்சிக்கு அருகில் இருக்கும் மணப்பாறை சிப்காட் பகுதியில் டாடா குழுமத்தின் டாடா ப்ராஜெக்ட்ஸ் சுமார் 283 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் பாக்ஸ்கான் நிறுவனம் தேடும் கூட்டணி டாடா குழுமமாக இருந்தால் தமிழ்நாட்டுக்குப் பெரிய ஜாக்பாட் தான். காரணம் இக்கூட்டணி அமையும் பட்சத்தில் டாடா குழுமத்துடன் இணைந்து பாக்ஸ்கான் உடனே மணப்பாறை சிப்காட்-ல் தொழிற்சாலை அமைக்கும் பணிகளை துவங்கலாம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications