தைவான் நாட்டின் முன்னணி டெக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களைத் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கான் பல நாடுகளில் வர்த்தகம் செய்து வரும் நிலையில் உலகம் முழுவதும் தனது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் பாக்ஸ்கான் தற்போது எல்கட்ரிக் கார் தயாரிப்பில் முழுவீச்சில் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
பாக்ஸ்கான் லியு யங் வே
ஐரோப்பா, இந்தியா, லத்தின் அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஜெர்மன் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் மறைமுக உதவிகளுடன் எலக்ட்ரிக் கார் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க உள்ளதாகப் பாக்ஸ்கான் தலைவர் லியு யங் வே தெரிவித்துள்ளார்.
புதிய கூட்டணி
இந்த மாபெரும் திட்டத்திற்காகப் பாக்ஸ்கான் அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனமான Fisker மற்றும் தாய்லாந்து நாட்டின் எனர்ஜி குரூப்-ஆன PTT PCL நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தக் கூட்டணி மூலம் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் பாக்ஸ்கான் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுக்க உள்ளது.
3 புதிய மாடல்கள்
இது மட்டும் அல்லாமல் பாக்ஸ்கான் நிறுவனம் Taipei நகரில் நடந்த மிக முக்கியமான நிகழ்ச்சியில் பாக்ஸ்கான் தயாரிக்க 3 எலக்ட்ரிக் கார்களை லியு யங் வே அறிமுகம் செய்து வைத்தார்.
பாக்ஸ்கான் நிறுவனம்
பாக்ஸ்கான் நிறுவனம் தனது எலக்ட்ரிக் கார் தயாரிப்புக்காக ஐரோப்பா, இந்தியா, லத்தின் அமெரிக்கா ஆகிய நாடுகளைத் தேர்வு செய்துள்ள நிலையில், எந்த நாட்டில் என்ன செய்யப்போகிறது, இதன் வர்த்தகத் திட்டம் என்ன என்பது குறித்து எவ்விதமான தகவல்களையும் தற்போது அளிக்க முடியாது என லியு யங் வே தெரிவித்துள்ளார்.
BOL திட்டம்
எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பை போலவே எலக்ட்ரிக் கார் தயாரிப்பு திட்டத்தையும் பாக்ஸ்கான் BOL திட்டத்தின் வாயிலாகவே செய்ய உள்ளது. அதாவது கூட்டணி நிறுவனத்துடன் இணைந்து முதலீடு செய்து தொழிற்சாலையைக் கட்டமைத்து, ஆப்ரேட் செய்து, லோக்லைஸ் செய்யும் கட்டமைப்பைத் தான் எலக்ட்ரிக் வாகன பிரிவிலும் பயன்படுத்த பாக்ஸ்கான் முடிவு செய்துள்ளது.
Stellantis கூட்டணி
2021 மே மாதம் பாக்ஸ்கான் மற்றும் Stellantis இணைந்து இன்-கார் மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பத்தை உருவாக்க புதிய கூட்டணி நிறுவனத்தை உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
சிப் உற்பத்தி
இதேபோல் பாக்ஸ்கான் இந்த மாத துவக்கத்தில் எலக்ட்ரிக் கார் தயாரிப்பதற்காக அமெரிக்காவில் Lordstown Motors நிறுவனத்தின் தொழிற்சாலையை வாங்கியது, ஆகஸ்ட் மாதம் தைவான் நாட்டில் சிப் உற்பத்தி தொழிற்சாலையை வாங்கியது.
முழு எலக்ட்ரிக் கார் கட்டமைப்பு
இந்தச் சிப் தொழிற்சாலை மூலம் வரும் காலத்தில் கார் தயாரிப்புக்குத் தேவையான சிப்-ஐ இந்தத் தொழிற்சாலையிலேயே தயாரிக்கத் திட்டமிட்டு வருகிறது பாக்ஸ்கான். இப்படி மொத்த எலக்ட்ரிக் கார் தயாரிப்புக்கான கட்டமைப்பையும் பாக்ஸ்கான் உருவாக்கி வருகிறது.
சென்னை
சென்னையில் மிகப்பெரிய தொழிற்சாலையை வைத்துள்ள பாக்ஸ்கான், தனது எலக்ட்ரிக் கார் தயாரிப்புக்குச் சென்னை மிகவும் சிறந்த இடமாக இருக்கும். ஏற்கனவே சென்னை ஆட்டோமொபைல் துறையில் சிறந்து விளங்கும் நிலையில் நிலையில் பாக்ஸ்கான் இந்தியாவில் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை துவங்க வேண்டும் என்றால் சிறந்த இடம் சென்னையாக இருக்கும்.


Click it and Unblock the Notifications