சீனா-வுக்கு போட்டியாக சென்னை.. பாக்ஸ்கான் எடுத்த முடிவால் தமிழ்நாட்டுக்கு ஜாக்பாட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருளின் உற்பத்திக்கு மத்திய அரசு அதிகப்படியான ஆதரவு அளிக்கப்பட்டு வரும் இதேவேளையில், சீனாவில் இருக்கும் உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவுக்கும் பிற நாடுகளுக்கு அதிகப்படியாக மாற்றி வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருளின் உற்பத்திக்கு மிகப்பெரிய உற்பத்தி தளத்தை வைத்துள்ள பாக்ஸ்கான் தனது இந்திய உற்பத்தியை அதிகரிக்க முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

இதன் தமிழ்நாட்டுக்கு ஜாக்பாட் கிடைத்துள்ளது.

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய செயல் தலைவராக ஜே ஒய் லீ நியமனம்.. ! சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய செயல் தலைவராக ஜே ஒய் லீ நியமனம்.. !

ஆப்பிள் - பாக்ஸ்கான்

ஆப்பிள் - பாக்ஸ்கான்

அமெரிக்காவின் முன்னணி கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனமாக இருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் முக்கியமான சப்ளையராக விளங்கும் பாக்ஸ்கான் இந்தியாவில் இருக்கும் தனது ஐபோன் தொழிற்சாலையில் அடுத்த 2 வருடத்தில் தனது ஊழியர்கள் எண்ணிக்கையை 4 மடங்கு அதிகரிக்கத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சீனா உற்பத்தி

சீனா உற்பத்தி

சீனாவில் உற்பத்திக்கும், உற்பத்தி அளவில் ஈடுபட்டு உள்ள பிரச்சனைக்கு மத்தியில் இந்திய தொழிற்சாலையின் மூலம் அதன் உற்பத்தியை அதிகரித்துச் சர்வதேச அளவில் இருக்கும் சப்ளை டிமாண்ட் பிரச்சனையைத் தீர்க்க முடிவு செய்துள்ளது பாக்ஸ்கான்.

பாக்ஸ்கான்-

பாக்ஸ்கான்-

சீனாவில் பாக்ஸ்கான்-க்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி தொழிற்சாலை Zhengzhou பகுதியில் உள்ளது, சமீபத்தில் இப்பகுதியில் கொரோனா தொற்றுக் காரணமாகக் கடுமையான நெருக்கடிக்கு இத்தொழிற்சாலை ஊழியர்கள் தள்ளப்பட்டதாகச் செய்திகள் வெளியானது.

ஜீரோ கோவிட் பாலிசி

ஜீரோ கோவிட் பாலிசி

இதேபோல் சீனா தொடர்ந்து ஜீரோ கோவிட் பாலிசி திட்டத்தைத் தொடர்ந்து நடைமுறையில் வைத்திருக்கும் காரணத்தால் சீனாவின் உற்பத்தி அளவு கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தான் ஆப்பிள் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் பொருட்களின் ஆர்டர் தாமதம் ஆகும் என்றும், உற்பத்தி டார்கெட் அளவுகளைக் குறைக்க உள்ளதாகச் சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

53000 ஊழியர்கள்

53000 ஊழியர்கள்

இந்த நிலையில் முதல் முறையாகப் பாக்ஸ்கான் இந்தியாவில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன்-ஐ உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. Foxconn தலைவர் லியு யங்-வே வியாழன் காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது நிறுவனம் அதன் உற்பத்தி திறன் மற்றும் டெலிவரி அளவை உலகளவில் சரிசெய்யும் என்று கூறினார்.

17000 ஊழியர்கள்

17000 ஊழியர்கள்

சீனா தொழிற்சாலையில் சுமார் 200000 பேர் பணியாற்றி வரும் நிலையில் சென்னையில் தற்போது 17000 ஊழியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். பாக்ஸ்கான் 2019ல் இந்தியாவில் முதல் தொழிற்சாலையை அமைத்துத் தொடர்ந்து உற்பத்தியை அதிகரித்து வருகிறது.

2019 முதல்

2019 முதல்

இந்த் நிலையில் முதல் முறையாகப் பாக்ஸ்கான் இந்தியாவில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன்-ஐ உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. Foxconn தலைவர் லியு யங்-வே வியாழன் காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது நிறுவனம் அதன் உற்பத்தி திறன் மற்றும் டெலிவரி அளவை உலகளவில் சரிசெய்யும் என்று கூறினார்.

உற்பத்தி

உற்பத்தி

இதன் மூலம் கிறிஸ்துமஸ் மற்றும் Lunar New Year விடுமுறைகளுக்கான விநியோகத்தில் எவ்விதமான இடையூறுகளாலும் அளவீடுகள் பாதிப்பு இருக்காது என்பதைத் தெரிவித்தார். சீனாவில் ஏற்பட்ட பாதிப்பைச் சென்னை தொழிற்சாலை மூலம் சரி செய்கிறது பாக்ஸ்கான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Foxconn plans to increase workforce 4 times at chennai plant, to add 53,000 more workers

Foxconn plans to increase workforce 4 times at chennai plant, to add 53,000 more workers to match china production distribution in next 2 years
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X