சென்னை: உலகின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான் இந்தியாவில் 83,000 கோடி ரூபாய்க்கு தொழில் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. தைவான் நாட்டை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் தங்களுடைய தொழிலை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வந்தது. இந்த முடிவு இந்நிறுவனத்தின் மாபெரும் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது.
சீனா , தைவான் இடையிலான பிரச்னைகள் , பொருட்கள் விநியோக சங்கிலியில் ஏற்பட்ட பாதிப்பு, அனைத்து நாடுகளுக்கும் வர்த்தகம் செய்ய முடியாமல் போனது உள்ளிட்ட காரணங்களால் ஃபாக்ஸ்கான் நிறுவனம் சீனாவில் இருந்து தங்களின் ஆலைகளை இந்தியாவுக்கு மாற்றியது. குறிப்பாக தமிழகத்தில் சென்னை அருகே மிகப்பெரிய ஆலையை ஃபாக்ஸ்கான் நிறுவியுள்ளது.

மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் கிடைத்த சலுகைகளை பயன்படுத்திக் கொண்ட ஃபாக்ஸ்கான் நிறுவனம் தற்போது அசைக்க முடியாத மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனமாக இந்தியாவில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. சுமார் 11,620 கோடி ரூபாய் முதலீட்டில் இந்தியாவில் கால் பதித்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் 2024ஆம் ஆண்டில் 83,000 கோடி ரூபாய்க்கு தொழில் செய்து இருப்பது தெரியவந்துள்ளது.
ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவரான யங் லியூ இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் தங்களது நிறுவனம் இந்தியாவில் 10 பில்லியன் டாலர்கள் அதாவது 83 ஆயிரம் கோடிக்கு தொழில் செய்து இருக்கிறது, அடுத்து வரக்கூடிய ஆண்டுகளில் இது மேலும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார். ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் ஐபோன் உற்பத்தியில் ஈடுபடுகிறது. அது மட்டும் இன்றி ஆப்பிள் நிறுவனத்தில் சொந்தமான பல்வேறு பொருட்களையும் இந்த நிறுவனம் தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது.
அண்மையில் கூட இந்த நிறுவனம் சிப் தயாரிப்பு தொழிலில் இறங்கியுள்ளது. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லியூவுக்கு கடந்த குடியரசு தினத்தன்று பத்மபூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. முன்னதாக இந்தியாவிற்கு வருகை லியு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தும், தொழில்துறை பிரதிநிதிகளையும் சந்தித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது என்றும் இந்தியாவின் வளர்ச்சியில் ஃபாக்ஸ்கான் நிறுவனமும் ஒரு பங்கு வகிக்க வேண்டும் என விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகே தன்னுடைய ஆலையை நிர்வகித்து ஐபோன் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த நிறுவனம் கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலும் முதலீடுகளை மேற்கொண்டு இருக்கிறது இந்தியாவைப் பொறுத்தவரை ஃபாக்ஸ்கான் நிறுவனம் கிட்டத்தட்ட 48 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கியுள்ளது, இதில் 70% பேர் பெண்கள் ஆகும்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications