சென்னை: தமிழ்நாட்டில் ஆலை அமைத்து ஐபோன்களை தயாரித்து வரக்கூடிய ஃபாக்ஸ்கான் (Foxconn) நிறுவனம் தன்னுடைய துணை நிறுவனமான இனோகானையும் (Ennoconn) தமிழ்நாட்டில் நிறுவ இருப்பது தெரியவந்துள்ளது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தைவான் நாட்டை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் சென்னை அருகே தன்னுடைய உற்பத்தி ஆலையை நிறுவி இருக்கிறது. ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள இந்த உற்பத்தி ஆலையில் தான் ஆப்பிள் நிறுவனத்திற்கு தேவையான ஐபோன்கள் தயாரிக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் ஆலையில் தயாரிக்கப்படும் ஐபோன்கள் இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் ஃபாக்ஸ்கானின் துணை நிறுவனமான இனோகான் நிறுவனம் கூடிய விரைவில் இந்தியாவில் தன்னுடைய நிறுவனத்தை அமைக்க இருப்பது உறுதியாகி உள்ளது. தமிழ்நாட்டில் இந்த நிறுவனம் அமைவதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இனோகான் கார்ப்பரேஷன் நிறுவனம் சர்வதேச அளவில் இன்டர்கிரேடட் கிளவுட் மேனேஜ்மென்ட் சேவைகளில் சிறந்த நிறுவனமாக இயங்கி வருகிறது. 2007 ஆம் ஆண்டு தான் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. சர்வதேச அளவில் தரம் வாய்ந்த நிறுவனங்களுக்கு தேவையான industrial IoT மற்றும் embedded technology, design manufacturing services, IT மற்றும் பிற சேவைகளை வழங்கி வருகிறது.
ஸ்மார்ட் சிட்டி, ஸ்மார்ட் மனுஃபேக்ச்சரிங், ஸ்மார்ட் ரீடைல், பைனான்சியல் சர்வீசஸ் மற்றும் மீடியா என்டர்டெயின்மென்ட் ஆகிய பிரிவுகளில் இனோகான் நிறுவனம் இந்த சேவைகளை வழங்கி வருகிறது. இந்திய சந்தையில் தற்போது இந்த பிரிவில் சைமென்ஸ் (Siemens) மற்றும் அட்வான்டெக் & ராக் வெல் ஆட்டோமேஷன் (Advantech and Rockwell Automation) ஆகிய நிறுவனங்கள் தான் பெருமளவில் தொழில் செய்கின்றன. இந்த நிலையில் தான் இனோகான் நிறுவனம் கூடிய விரைவில் இந்தியாவில் கால் பதித்து இந்த துறையை கைப்பற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசு இந்தியாவில் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக பிஎல்ஐ எனப்படும் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்தி வருவதால், அதை பயன்படுத்திக்கொண்டு இனோகான் இந்தியாவில் ஆலைகளை நிறுவுவதற்கு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் உற்பத்தியை பெருக்குவதற்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் பிஎல்ஐ. உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட நிதியுதவி திட்டம் இது. இந்த திட்டத்தின் மூலம் அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத நிலவரப்படி 1.4 லட்சம் கோடி ரூபாயை வழங்கியிருப்பதாக தெரிகிறது. அடுத்த ஓராண்டுக்குள் இது 2 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த பிஎல்ஐ திட்டத்தின் மூலம் இந்தியாவில் 12.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி நடைபெற்று இருப்பதாகவும் சுமார் 9.5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications