தைவான் நாட்டை சேர்ந்த முன்னணி எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான், இந்தியாவில் செமிகண்டக்டர் தொழிற்சாலையை அமைக்க விண்ணப்பித்துள்ளது. இது இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் புதிய சகாப்தத்தைத் தொடங்கும் ஒரு முக்கியமான வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
ஃபாக்ஸ்கான் வேதாந்தா நிறுவன கூட்டணியை உடைத்த பின்பு தானியாக செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்க முயற்சிகளை துவங்கியது. இந்த நிலையில் ஃபாக்ஸ்கான் முயற்சிகளையும், இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பது குறித்தும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மக்களவையில் புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

ஃபாக்ஸ்கான் வேதாந்தா கூட்டணியில் குஜராத்தில் தொழிற்சாலையை அமைக்க திட்டமிடப்பட்ட நிலையில், தற்போது கூட்டணி உடைந்த நிலையில் அதிகப்படியான உற்பத்தி கட்டமைப்பு கொண்டு தமிழ்நாட்டில் அமைக்க வாய்ப்புகள் உள்ளது.
ஃபாக்ஸ்கான் ஆப்பிள், சாம்சங், ஹூவே போன்ற உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்காக பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களைத் தயாரிக்கிறது. இந்நிறுவனம் இந்தியாவில் செமிகண்டக்டர் வசதியை அமைத்தால், அது இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் ஒரு முக்கிய உந்து சக்தியாக இருக்கும்.
இந்திய அரசு எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியை அதிகரிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், செமிகண்டக்டர்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் உபகரணங்களில் பெரிய முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்துதல் ஆகியவை முக்கிய பகுதியாக உள்ளது.
ஃபாக்ஸ்கான், இந்தியாவில் செமிகண்டக்டர் தொழிற்சாலையை அமைத்து உற்பத்தியை துவங்கினால் இந்தியா, உலகின் முக்கியமான எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி தளங்களில் ஒன்றாக மாற்ற உதவும்.
ஃபாக்ஸ்கான் இந்தியாவில் செமிகண்டக்டர் வேஃபர்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளை அமைப்பதற்கான மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் தற்போது விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது. ஃபாக்ஸ்கானின் விண்ணப்பம் இன்னும் பரிசீலனையில் உள்ளது.
மைக்ரானின் செமிகண்டக்டர் யூனிட் : ஃபாக்ஸ்கானின் விண்ணப்பத்திற்கு முன்பே, அமெரிக்க நிறுவனமான மைக்ரானின் முதல் செமிகண்டக்டர் யூனிட் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த யூனிட் செமிகான் இந்தியா திட்டத்தின் கீழ் ஜூன் 2023 இல் அங்கீகரிக்கப்பட்டது.
மைக்ரானின் யூனிட் குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ளது, இந்த யூனிட்டின் கட்டுமானப் பணிகள் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டன.
ஃபாக்ஸ்கான் மற்றும் மைக்ரானின் இந்த விண்ணப்பங்கள் இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கும். இந்த நிறுவனங்கள் இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தியை அதிகரிக்க உதவும். இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான பங்களிப்பாக இருக்கும்.


Click it and Unblock the Notifications