தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்டு உலகின் பல நாடுகளில் உற்பத்தி மற்றும் அசம்பிள் தொழிற்சாலைகளை வைத்துக்கொண்டு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் உற்பத்தி சந்தையை கட்டியாண்டு வருகிறது Foxconn Technology Group.
பாக்ஸ்கான் நிறுவனத்தின் தாய் நிறுவனமான Hon Hai Precision இந்திய அரசின் எந்த ஊக்கமும் இல்லாமல், சொந்தமாக செமிகண்டக்டர் ஆலையை அமைப்பது குறித்து ஆலோசித்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லியு தலைமையிலான இந்நிறுவனத்தின் உயர்மட்ட அதிகார குழு அதிகாரிகள், பல சர்ச்சைகளை உருவாக்கிய ஒரு வார இந்தியப் பயணத்தை முடித்த நிலையில் தற்போது இப்புதிய தகவல் வெளியாகியுள்ளது.
பாக்ஸ்கான்
பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லியு இந்திய பயணத்தில் கர்நாடகா மற்றும் தெலுங்கானா அரசாங்கங்கள் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் கையெழுத்திட்ட தனித்தனி கடிதங்களை வெளியிட்டது. ஆனால் பாக்ஸ்கான் இரு மாநிலத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் மிகைப்படுத்தி காட்டப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.
40 பில்லியன் டாலர்
இந்த சர்ச்சை முழுவதுமாக மறைவதற்குள், உலகின் மிகப்பெரிய ஒப்பந்த உற்பத்தியாளரான பாக்ஸ்கான் நிறுவனத்திடம் 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டு உபரி உள்ளது, அதன் நிலையில் இந்தியாவில் தனது சொந்த முதலீட்டான 40 பில்லியன் டாலர் முதலீடு செய்து செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலையை அமைக்க உள்ளதாகவும், இதனால் மத்திய அரசின் உதவிகள் பெற வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக ஈடி தெரிவித்துள்ளது.
எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி
இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி எந்த அளவுக்கு முக்கியமோ, அதைவிட முக்கியம் செமிகண்டக்டர் சிப். இரண்டும் சீரான வளர்ச்சியை அடைந்தால் மட்டுமே இப்பிரிவில் மிகப்பெரிய ஏற்றுமதி சாதனையை படைக்க முடியும்.
முக்கிய திட்டம்
Foxconn இந்தியாவில் இயந்திர மற்றும் துல்லியமான இயந்திரங்கள், எலக்ட்ரிக் வாகனங்கள், IC-களின் வடிவமைப்பு மற்றும் செமிகண்டக்டர் பிரிவுகளில் உற்பத்தி செய்வதை முக்கிய இலக்காக கொண்டுள்ளது. இதற்காக கடந்த ஆண்டு, பாக்ஸ்கான் நிறுவனத்தின் EV பிரிவான Foxtron தனது முயற்சிகளை துவங்கியது.
வேதாந்தா கூட்டணி
இந்த நிலையில் தான் வேதாந்தா உடன் இணைந்து பாக்ஸ்கான், செமிகண்டக்டர் சிப் வணிகத்தில் கால் பதிக்க முடிவு செய்தது. இக்கூட்டணி நிறுவனம் 13.6 பில்லியன் டாலர் முதலீட்டில் செமிகண்டக்டர் சிப் உற்பத்தி ஆலையை அமைக்க திட்டமிட்டு உள்ளது.
அகமதாபாத்-ல் தொழிற்சாலை
இத்தொழிற்சாலையை குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் அருகே உள்ள தோலேரா சிறப்பு முதலீட்டு பகுதியில் நிலத்தை தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மத்திய அரசு இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் உற்பத்தியை ஊக்குவிக்க 76,000 கோடி ரூபாய் மகிப்பிலான செமிகான் இந்தியா திட்டத்தை அறிவித்தது.
செமிகண்டக்டர் சிப்
இந்த திட்டத்தின் கீழ் வேதாந்தா - பாக்ஸ்கான் இணைந்து உருவாக்கும் புதிய செமிகண்டக்டர் சிப் உற்பத்தி தொழிற்சாலைக்கு 5.6 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதி ஆதரவை செமிகான் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் கோரியது. தற்போது இந்த உதவிகள் பெற வேண்டாம் என பாக்ஸ்கான் முடிவு செய்துள்ளது.
வேதாந்தா குழுமம் நிலை என்ன
இதேவேளையில் வேதாந்தா குழுமம் கடன் சுமையை குறைக்க வேண்டியது மட்டும் அல்லாமல் புதிய கடன்களை வாங்க முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளது. ஆனால் கடன்களை வாங்கி தொடர்ந்து முன்னேற முயற்சிகள் எடுத்தாலும் இதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் பாக்ஸ்கான்-க்கு அரசின் உதவி தேவை இல்லாத பட்சத்தில் வேதாந்தா உடன் கூட்டணியை தொடருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications