பாக்ஸ்கான் நிறுவனத்தின் 1600 கோடி ரூபாய் முதலீட்டில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் பாக்ஸ்கான் தொழிற்சாலை அமைந்திருக்கும் அதே பகுதியில் உதிரிபாகங்களுக்கான தயாரிப்புக்கான புதிய தொழிற்சாலையை அமைத்து சுமார் 6,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
இந்த நிலையில் ரெயூட்டர்ஸ் நிறுவனத்தின் பாக்ஸ்கானின் கிளை நிறுவனமான Foxconn Industrial Internet நிறுவனத்திடம் இதுக்குறித்து கேட்ட நிலையில் FII தமிழ்நாட்டில் முதலீடு செய்ய எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என்று தெரிவித்தது. ஆனால் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்தது Hon Hai Technology நிறுவனம்.

தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஆகியோர் டிவிட்டரில் பாக்ஸ்கான் கிளை நிறுவனமான Hon Hai Technology Group முதலீட்டு குறித்து நேற்றே டிவிட்டர் மற்றும் அறிக்கை வாயிலாக தெரிவித்தனர். ஆனாலும் ரெயூட்டர்ஸ் நிறுவனத்தின் தவறான விளக்கத்தின் மூலம் இன்று காலை முதல் தமிழ்நாடு முதலீடு குறித்து கடுமையான விமர்சனம் எழுந்தது.
இந்த குழப்பத்தை காலையிலேயே தமிழ் குட்ரிட்டன்ஸ் தெளிவுப்படுத்திய நிலையில் தற்போது தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா இன்று மாலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் விமர்சனங்களுக்கும், போலி என கிண்டல் செய்தவர்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜகவிற்கு மக்கள் இடமளிக்கவில்லை என்ற கோபத்தில் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் பெருகி வருவதை கண்டு பாஜக வயிற்றெரிச்சல் அடைந்துள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே முதலீடுகள் கிடைக்க வேண்டும் என்று நினைப்பது மிக மோசமான சிந்தனை என தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டாக்டர் டிஆர்பி ராஜா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications