Foxconn. இந்த கம்பெனி பெயரை எங்கோ கேள்விப்பட்டது போல் இருக்கிறதா..? அட ஆமாங்க. உலகின் முன்னணி பிரீமியம் ஸ்மார்ட்ஃபோன்களைத் தயாரிக்கும் ஆப்பிள் கம்பெனியின் உற்பத்தியாளர் தான் இந்த ஃபாக்ஸ் கான் (Foxconn).
இந்த ஃபாக்ஸ் கான் (Foxconn) ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு கம்பெனிக்கு, ஏற்கனவே சென்னைக்கு சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஒரு உற்பத்தி ஆலை இருப்பதும் இங்கு நினைவு கூறத்தக்கது.
இப்போது அந்த ஆலையை விரிவாக்கம் செய்யவே கூடுதலாக முதலீடு செய்யப் போகிறார்களாம். அதாவது தமிழகத்துக்கு முதலீடுகள் வரப் போகிறது.
எவ்வளவு முதலீடு
ஃபாக்ஸ் கான் (Foxconn) கம்பெனி, தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருக்கும் ஆப்பிள் ஐபோன் உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்ய சுமார் 1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 7,500 கோடி ரூபாய்) முதலீடு செய்யப் போவதாக ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
ஏன் திடீர் முதலீடு
ஆப்பிள் நிறுவனம், சீனாவில் உற்பத்தி செய்யப்படும் தன் ஸ்மார்ட்ஃபோன்களை, வேறு நாடுகளுக்கு மடை மாற்ற திட்டமிட்டுக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வெளியாயின. அதோடு சீனாவைச் சார்ந்து இருப்பதையும் கணிசமாக குறைக்க விரும்புகிறது ஆப்பிள். எனவே, ஆப்பிள் ஸ்மார்ட்ஃபோன்களை உற்பத்தி செய்து கொடுக்கும் ஃபாக்ஸ் கான் (Foxconn) கம்பெனி தன் ஸ்ரீபெரும்புதூர் ஆலையை விரிவாக்க முதலீடு செய்வதாகவும் செய்திகள் சொல்கின்றன.
3 ஆண்டுகளில் முதலீடு
இந்த 1 பில்லியன் டாலர் (7,500 கோடி ரூபாய்) முதலீட்டை ஒரே அடியாக முதலீடு செய்யப் போவதில்லையாம். மெல்ல பகுதி பகுதியாக, அடுத்த மூன்று ஆண்டுகளில் முதலீடு செய்யப் போகிறார்களாம். மத்திய அரசின் production-linked incentive திட்டத்தில் பயன்பெற விரும்பும் ஒரு கம்பெனியாகவும் ஃபாக்ஸ் கான் (Foxconn) விண்ணப்பித்து இருக்கிறதாம்.
தமிழக மக்களுக்கு ஜாக்பாட்
தற்போதைய சூழலில் வேலை வாய்ப்புகள் கிடைப்பது என்பது மிகவும் சிரமமான விஷயம். ஆனால் ஃபாக்ஸ் கான் (Foxconn) கம்பெனியின் இந்த விரிவாக்கத் திட்டத்தினால், ஸ்ரீபெரும்புதூர் ஆலையில், சுமாராக 6,000 வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் சொல்லி இருக்கிறார்கள். இது உண்மையாகவே தமிழக மக்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு தான்.
கொஞ்சம் வரலாறு
தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ஃபாக்ஸ் கான் (Foxconn) உற்பத்தி ஆலையில் தான், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸ் ஆர் (iPhone XR) ரக போன்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களிலேயே விலை மலிவான ஐபோன்களின் ஒன்று இந்த ஐபோன் எக்ஸ் ஆர் என்பது குறிப்பிடத்தக்கது.
சியாமிக்கும் இவர்கள் தான்
இதே ஃபாக்ஸ் கான் (Foxconn) நிறுவனம் தான், சீனாவின் மிகப் பெரிய ஸ்மார்ட்ஃபோன் கம்பெனியான சியாமிக்கும் ஸ்மார்ட்ஃபோன்களை உற்பத்தி செய்து கொடுத்துக் கொண்டு இருக்கிறது. ஆனால், சியாமி ஸ்மார்ட்ஃபோன்கள், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஃபாக்ஸ் கான் (Foxconn) உற்பத்தி ஆலைகளில் தயாரிக்கப்படுகிறதாம். தற்போது, ஃபாக்ஸ் கான் (Foxconn) செய்ய இருக்கும் முதலீடு தமிழகத்தில் இருக்கும், ஐபோன் உற்பத்தி ஆலைகளில் தான் செய்ய போகிறார்களாம்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications