சென்னை: தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர்ச்சியாக பல்வேறு முதலீடுகளை ஈர்த்த வண்ணம் இருக்கிறது . அனைத்து மாவட்டங்களிலும் முதலீட்டாளர்கள் மாநாடு, அனைத்து மாவட்டங்களிலும் டைடல் பூங்காக்கள் என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக தைவான் நாடுகளை சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வைப்பதிலும் முதலீடு செய்ய வைப்பதிலும் தமிழ்நாடு அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது . தைவானை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஏற்கனவே தன்னுடைய ஐபோன் உற்பத்தி ஆலையை நிறுவி இருக்கிறது தமிழ்நாட்டில் நிறுவியுள்ளது.

ஃபாக்ஸ்கான் நிறுவனம் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் தன்னுடைய ஐபோன் உற்பத்தி ஆலையை நிறுவி செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படக்கூடிய ஐபோன்கள் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில் அடுத்த கட்டமாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் 15,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கிறது .
தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இந்த அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறார். அதில் இதுவரை இல்லாத அளவாக மிகப்பெரிய ஒரு முதலீடு தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறது எனக் கூறியிருக்கிறார் . ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் 15,000 கோடி முதலீடு செய்ய உறுதி அளித்திருக்கிறது இதன் மூலம் 14,000 வேலை வாய்ப்புகள் உருவாகப் போகின்றன பொறியாளர்களே தயாராக இருங்கள் என பதிவு செய்திருக்கிறார்.
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டின் முதலீட்டு முகமையான கைடன்ஸ் தமிழ்நாடு தான் ஃபாக்ஸ்கானுக்கு என பிரத்தியேகமாக ஒரு ஃபாக்ஸ்கான் டெஸ்கை கொண்ட ஒரு அமைப்பாக செயல்பட இருக்கிறது என குறிப்பிட்டு இருக்கும் அவர் தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி பிரிவுக்கு மிகப்பெரிய ஊக்கம் தரும் வகையில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் 15,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கிறது என கூறியிருக்கிறார்.
ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தின் பிரதிநிதிகள் ராபர்ட் ஹூ உள்ளிட்டோர் முதலமைச்சர் ஸ்டாலினை இன்று சந்தித்து தமிழ்நாட்டில் கூடுதலாக 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான உத்தரவாதத்தை அளித்துள்ளனர். இந்த புகைப்படத்தையும் டிஆர்பி ராஜா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
ஃபாக்ஸ்கான் நிறுவனம் தன்னுடைய ஐபோன் உற்பத்தி மட்டுமில்லாமல் அடுத்த கட்டமாக பல்வேறு உற்பத்திகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள இருக்கிறது அதுமட்டுமின்றி ஆய்வு மற்றும் மேம்பாடு இணைப்புகள், ஏஐ அடிப்படையான தொழில்நுட்ப செயல்பாடுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டுவர இருக்கிறது என கூறியிருக்கிறார். இதற்காக தான் ஃபாக்ஸ்கான் டெஸ்க் இன் இந்தியா என்ற பெயரில் ஃபாக்ஸ் கான் நிறுவனத்திற்கான அனைத்து வசதிகளையும் செய்து தரக்கூடிய ஒரு சிறப்பு அமைப்பையே தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது என தெரிவித்திருக்கிறார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications