உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கான், தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு கடந்த சில வருடங்களாக மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பை பெற்று வேகமாக வளர்த்து வரும் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் திட்டத்தில் தீவிரமாக இறக்கியது.
பாக்ஸ்கான் எப்படி ஆப்பிள் நிறுவனத்திற்கு ஒப்பந்த உற்பத்தியாளராக ஐபோன் மற்றும் இதர கருவிகளை தயாரித்து கொடுக்கிறதோ, அதேபோல் எலக்ட்ரிக் கார் தயாரிப்பிலும் முன்னணி நிறுவனங்களுக்கான கார்களை தயாரிக்க முயற்சி செய்தது. இதற்காக ஹூண்டாய் போன்ற நிறுவனங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த நிலையில் பாக்ஸ்கான், ஆட்டோமொபைல் துறையில் தனது திறனை வெளிப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவில் தொழிற்சாலை அமைத்து களத்தில் இறங்கியது. இதன் வெளிப்பாடாக MODEL N என்னும் சிறிய ரக எலக்ட்ரிக் வாகனத்தை தாயாரித்துள்ளதாக பாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதியான வி லீ தெரிவித்தார்.
இதுக்குறித்து வி லீ தனது லின்கிடுஇன் தளத்தில் செய்த பதிவில் பாக்ஸ்கான் புதிய எலக்ட்ரிக் வாகனத்தை அக்டோபர் 18 ஆம் தேதி நடக்க உள்ள HHTD23 என்னும் Hon Hai Tech Day 2023 தினத்தில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
பாக்ஸ்கான் நிறுவனத்திடம் வலிமையான டெக் இன்னோவேஷன் கட்டமைப்பை கொண்டு உள்ளது, எலக்ட்ரிக் வாகன தயாரிப்புகுள் இறக்குவது கேம் சேஞ்சர் ஆக இருக்கும் என வி லீ தெரிவித்தார். MODEL N மூலம் பசுமை போக்குவரத்தின் எதிர்காலத்தை தொடர்ந்து மேம்படுத்தப்பட உள்ளது.
MODEL N வீடியோ-வை பர்க்கும்போது இது ஒரு வணிக வாகனம், அனைவரும் எதிர்பார்த்த பயணிகள் வாகனம் இல்லை என்பது தெரிகிறது. இதன் மூலம் பெரிய அளவிலான வர்த்தகத்தை எட்ட முடியாது என்றாலும், மக்கள் மத்தியில் நம்பிக்கையை பெறவும், கூட்டணி வர்த்தகத்தை உருவாக்கவும் இது சாம்பிள் பீஸ் ஆகவும் இருக்கும். இது பாக்ஸ்கான் நிறுவனத்தால் எலக்ட்ரிக் வாகனத்தை மலிவான விலையில் தயாரிக்க முடியும் என்பதை காட்டுவதற்காக உருவாக்கப்பட்ட கார் என்பதால் இது புதிய வெற்றி பாதையின் முதல் படியாக உள்ளது.
பாக்ஸ்கான் சொந்தமாக எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க திட்டமிட்டு இதற்கான சப்ளை செயின், அசம்பிளி லைன் பணிகளை செய்து வந்த நிலையில், இப்புதிய ஆட்டோமொபைல் வர்த்தகதிற்கான முதல் தொழிற்சாலையை அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்த தொழிற்சாலையை இந்தியா அல்லது இந்தோனேஷியாவில் அமைக்கும் திட்டத்துடன் களத்தில் இறங்கியுள்ளது.
பாக்ஸ்கான் நிறுவனம் எல்க்ட்ரிக் வாகன பிளாட்பார்ம் உருவாக்க Mobility in Harmony (MIH) என்ற தனி நிறுவனத்தை துவங்கியது. இந்த நிறுவனம் 3 சீட் கொண்ட 20000 டாலருக்கும் குறைவான எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் என MIH நிறுவனத்தின் சிஇஓ ஜாக் செங் முன்பு தெரிவித்துள்ளார். ஆனால் இப்போது வீடியோவில் 2 சீட் கொண்ட கமர்சியல் வாகனத்தை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. மொபிலிட்டி இன் ஹார்மோனி என்பதன் சுருக்கம் தான் MIH நிறுவனம்.
பாக்ஸ்கான் தற்போது அமெரிக்காவில் OHIO-வில் தொழிற்சாலை அமைப்பதை உறுதி செய்யப்பட்ட நிலையில், அடுத்தது தாய்லாந்து நாட்டிலும், இதை தொடர்ந்து கட்டாயம் இந்தியாவில் தொழில்சாலை அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications