தைவான் நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான், இந்தியாவில் பேட்டரி சேமிப்பு அமைப்பை (BESS) உருவாக்கும் தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டு வருவதாக இந்நிறுவனத்தின் தலைவர் யங் லியு தெரிவித்துள்ளார். யங் லியு ஆகஸ்ட் 17ஆம் தேதி சென்னையில் தொழிற்சாலைக்கு அருகில் தமிழ்நாடு அரசு கட்டிக்கொடுத்த மாபெரும் விடுதி வசதியின் திறப்பு விழாவுக்கு வந்திருந்தார்.
அப்போது பாக்ஸ்கான் நிறுவனத்தின் எதிர்கால திட்டம், தமிழ்நாட்டின் அடுத்த பெரும் முதலீடு குறித்த கேள்விகளுக்குப் பதில் அளித்தார். எலக்ட்ரிக் வாகன பிரிவில் கவனம் செலுத்தும் பாக்ஸ்கான், தனது பேட்டரி உற்பத்தி தொழிலை விரிவுபடுத்தி வருகிறது. இதற்காக ஏற்கனவே தைவானில் ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் இத்தகைய தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக பிடிஐ செய்தியாளர்களிடம் பேசும் போது கூறினார்.

இந்தியாவில் பாக்ஸ்கானின் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப பிரிவு தற்போது தான் தொடங்கப்பட்டுள்ளது என்று இந்நிறுவன தலைவர் யங் லியு பிடிஐ செய்தியாளர்களிடம் பேசும் போது கூறினார்.
மேலும் அவர் பேசுகையில் "நாங்கள் எங்களின் 3+3 எதிர்காலத் தொழிலை இந்தியாவில் கொண்டு வர காத்திருக்கிறோம். தமிழ்நாட்டில் BESS (பேட்டரி சேமிப்பு அமைப்பு) தொழிற்சாலை அமைப்பது குறித்தும், இத்துறையில் எவ்வாறு இயங்குவது என்பது பற்றி தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா அவர்களுடன் பேசி வருகிறேன்..." என்று லியு கூறினார்.
"3+3 strategy"யின் ஒரு பகுதியாக, பாக்ஸ்கான் எலக்ட்ரிக் வாகனங்கள், டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் ரோபோடிக்ஸ் ஆகிய மூன்று முக்கிய தொழில்களை முன்னுரிமைப்படுத்தியுள்ளது. இவற்றில் ஒவ்வொன்றும் தற்போது 1.4 டிரில்லியன் டாலர் வர்த்தகத்தை கொண்டுள்ளது, இது வருடத்திற்கு 20 சதவிகிதத்திற்கும் அதிகமான வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது என யங் லியு கூறினார்.
பாக்ஸ்கானின் பேட்டரி சேமிப்பு தொழில் மூலம் எலக்ட்ரிக் வாகன துறையில் அதிக கவனம் செலுத்தும். பேட்டரி சேமிப்பு அமைப்புகள் (BESS) மூலம் சோலார், காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைச் சேமிக்க முடியும். இதோடு விரைவில் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன பிரிவையும் நிறுவ திட்டமிட்டுள்ளோம் என லியு கூறினார்.
2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் பாக்ஸ்கானின் வணிகம் 10 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என்று லியு கூறினார். தனது தற்போதைய வருகையின் போது பல்வேறு மாநில முதல்வர்களைச் சந்தித்ததாகவும், இந்தியா உற்பத்தி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு என அனைத்திலும் உயர்ந்து வருவதை உணர்வதாகவும் கூறினார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications