இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தியில் இறங்க முடிவு செய்த பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு அடுத்தடுத்து பல பிரச்சனைகள் உருவாகி வருகிறது, முதலில் அரசின் மானியத்தை பெறுவதற்கான விதிமுறைகளை முழுமையாக பின்பற்றாத காரணத்தால் மானியங்களுக்கான ஒப்புதல் பெற தாமதமானது.
இதை தொடர்ந்து திருத்தங்கள் செய்து மீண்டும் மானியத்திற்காக விண்ணப்பங்கள் சமர்ப்பித்த போதும் தோல்வி அடைந்தது. இது மட்டும் அல்லாமல் பாக்ஸ்கான் தனது செமிகண்டக்டர் தொழிற்சாலையை அனில் அகர்வால்-ன் வேதாந்தா குழுமத்துடனான கூட்டணியில் குஜராத்தில் அமைக்க திட்டமிடப்பட்டது.

மத்திய அரசுடனான மானியம் பெறுவதில் பிரச்சனை துவங்கி வேதாந்தா குழுமத்தின் மோசமான நிதிநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பாக்ஸ்கான் தற்போது புதிய கூட்டணிக்காக இந்தியாவின் பெரு நிறுவனங்களின் கூட்டணியை தேடி வருகிறது.
ஒரு வருடத்திற்கு முன்பு பாக்ஸ்கான் மற்றும் வேதாந்தா குழுமம் இணைந்து உருவாக்கிய உருவாக்கப்பட்ட கூட்டணி நிறுவனம் குஜராத் மாநிலத்தில் Dholera என்னும் பகுதியில் செமிகண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க முடிவு செய்தது.
அமெரிக்காவின் மைக்ரான், டாடா குழுமம் ஆகியவை தற்போது OSAT தொழிற்சாலையை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது, ஆனால் பாக்ஸ்கான் செமிகண்டக்டர் சிப் தயாரிக்கும் மூலப்பொருள் அதாவது சிலிக்கான் வேப்பர் தயாரிக்கும் பணியில் இறங்க உள்ளது.
பாக்ஸ்கான் இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கபோகிறது என அறிவித்த உடனே தமிழ்நாட்டின் சார்ப்பில் கைடென்ஸ் தமிழ்நாடு அமைப்பின் தலைவர்கள் பாக்ஸ்கான் தலைவர்களை நேரில் சந்தித்து பேசினர், ஆனால் வேதாந்தா கூட்டணியில் பாக்ஸ்கான் குஜராத்தில் தொழிற்சாலை மாற அமைக்கபடுவதாக அறிவித்தது.
இந்த நிலையில் வேதாந்தா குழுமம் உடனான இணைப்பை பாக்ஸ்கான் உடைத்துக்கொண்டு புதிய பார்ட்னர்களை தேட முடிவு செய்துள்ள நிலையில் பாக்ஸ்கான் டாடா குழுமம், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கௌதம் அதானியின் அதானி குழுமம் ஆகியோர் உடனும் கூட்டணி வைக்க வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் புதிய கூட்டணி என்பதால் தொழிற்சாலையும் வேறு இடத்திற்கு மாற வாய்ப்புகள் உள்ளது என்றாலும்...
பாக்ஸ்கான் - வேதாந்தா கூட்டணி ஏற்கனவே பல்வேறு சலுகைகள் உடன் தொழிற்சாலை அமைப்பதற்கான நிலத்தை தேர்வு செய்துள்ளது. மேலும் கூட்டணியில் வேதாந்தா மிகவும் உறுதியாக இருப்பதாக ஈடி கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளது. இக்கூட்டணி நிறுவனத்தில் சுமார் 67 சதவீத பங்குகள் வேதாந்தா குழுமம் கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications