தெலுங்கானா மாநிலத்தில் தைவான் நாட்டை தலைமையகமாக கொண்ட பாக்ஸ்கான் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அதன் உற்பத்தி ஆலையை தொடங்கவுள்ளது. அதன்மூலம் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மிகப்பெரிய ஏற்றுமதி மற்றும் உற்பத்தி துறையாக மாறி வரும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் துறையில் வாய்ப்புகள் ஏராளமாக குவிந்துக்கிடக்கும் நிலையில், வெளிநாட்டு நிறுவனங்கள் அடுத்தடுத்து முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறது.
இதன் அடிப்படையில் தான் பாக்ஸ்கான் தெலுங்கானாவில் அமைக்கும் மாபெரும் தொழிற்சாலை.
தெலுங்கானாவில் பாக்ஸ்கான்!
பன்னாட்டு நிறுவனமாக பாக்ஸ்கான் எலக்ட்ரானிக்ஸ் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் அதன் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கும் ஒப்பந்தத்தில் தெலுங்கான முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அவர்களுடன் வியாழக்கிழமை ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு உறுதிபடுத்தியுள்ளது.
பிரகதி பவனில் ஒப்பந்தம்!
இந்த தொழிற்சாலை அமைக்கும் ஒப்பந்தமானது தெலுங்கானவின் பிரகதி பவனில் மார்ச் 2 அன்று தெலுங்கான முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் மற்றும் பாக்ஸ்கான் தலைவர் யங் லியு ஆகியோர் முன்னிலையில் Hon Hai Technology Group மற்றும் தெலுங்கானா அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு!
இந்த ஒப்பந்தம் மூலம் தெலுங்கானாவில் 10 ஆண்டுகளில் சுமார் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு இருக்கும் என தெலுங்கானா மாநில முதலமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது.
பாக்ஸ்கான் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையை அமைக்க எவ்வளவு பணம் முதலீடு செய்யப்படவுள்ளது என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
முதலமைச்சர் நம்பிக்கை!
இந்த ஒப்பந்தம் குறித்து தெலுங்கானாவின் முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் கூறுகையில், தைவானுடன் தெலுங்கானாவிற்கு இயற்கையாகவே உறவு இருப்பதுபோல உணர்வதாகவும், இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் மற்றும் பாக்ஸ்கானின் வளர்ச்சியில் ஒரு அங்கமாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி
மேலும் இதன் மூலம் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியை பல்வகைப்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் மாநில அரசு ஆற்ற வேண்டிய முக்கிய கடமைகள் குறித்தும் முதலமைச்சர் விளக்கியுள்ளார்.
வேலைவாய்ப்பு
மேலும் இந்த தொழிற்சாலையை அமைப்பதன் மூலம் மாநிலத்தில் இளைஞர்களுக்கு அதிகளவிலான வேலைவாய்ப்பை உருவாக்கி வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்கவும், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
பாக்ஸ்கான் தலைவர் பெருமிதம்!
மேலும் பாக்ஸ்கான் தலைவர் வெறும் 8 ஆண்டுகள் தெலுங்கான தொழில் துறையில் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய எலக்ட்ரானிக்ஸ் துறையில் குறுகிய காலகட்டத்தில் மாநிலம் பெரிய வளர்ச்சியைடைந்து குறித்து பாரட்டியுள்ளார். மேலும் இம்மாநிலத்தில் அவர்கள் நிறுவனத்தின் முதலீடுகள் மற்றும் முன்னேற்றம் குறித்து பெரும் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் யங் லியு கூறியுள்ளார்.
பாக்ஸ்கான் (Foxconn)
பாக்ஸ்கான் எலக்ட்ரானிக்ஸ் தைவான் நாட்டின், நியூ தைபே சிட்டியை தலைமையகமாகக் கொண்ட Hon Hai Precision Industry Co Ltd குழுமத்தின் பன்னாட்டு மின்னணு ஒப்பந்த உற்பத்தியாளர் நிறுவனமாகும். இந்நிறுவனம் தைவானில் 1974 இல் நிறுவப்பட்டது. இக்குழுமம் சீனா, தைவான் போன்ற சர்வதேச அளவில் வர்த்தகம் செய்து வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications