செமிகண்டக்டர் போர் அமெரிக்கா - சீனாவுக்கு மத்தியில் பூதாகரமாக வெடித்திருக்கும் நிலையில், இத்துறையில் மிகப்பெரிய வர்த்தக வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இதை பணமாக்க இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கிறது அமெரிக்காவின் மைக்ரான் நிறுவனம். ஆனால் இதற்கு முன்பே வேதாந்தா - பாக்ஸ்கான், Tower Semiconductor, Next Orbit ஆகியவற்றின் திட்டமும் எவ்விதமான முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.
இதில் வேதாந்தா - பாக்ஸ்கான் கூட்டணி கடுமையாக மத்திய அரசிடம் இருந்து மானியம் பெற முயற்சி செய்த நிலையில் தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்த காரணத்தாலும், கருத்து வேறுபாடு, முயற்சிகளில் முன்னேற்றம் இல்லாத காரணத்தாலும் கூட்டணி உடைந்தது.

தற்போது வேதாந்தா குழுமம் மற்றும் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் தனித்தனியாக செமிகண்டக்டர் தொழிற்சாலைகளை அமைக்கும் முடிவில் இறங்கியது. குறிப்பாக பாக்ஸ்கான் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மத்திய அரசிடம் வரைவில் தனித்து செமிகண்டக்டர் தொழிற்சாலைகளை அமைப்பதற்காக விண்ணப்பம் கொடுக்க உள்ளதாக அறிவித்தது.
பாக்ஸ்கான் அறிக்கை வெளியிட்ட சூட்டோடு, இன்று மத்திய அரசிடம் பாக்ஸ்கான் இந்தியாவில் குறைந்தது 4 முதல் 5 செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் உற்பத்தி லைன்களை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. கூட்டணி இல்லாத காரணத்தால் முதலீடும், உற்பத்தி அளவும் குறையும் என எதிர்பார்த்த நிலையில் 4 முதல் 5 செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் உற்பத்தி லைன்களை அமைக்கும் முடிவு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.
மேலும் மத்திய அரசிடம் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் இந்தியாவில் செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் உற்பத்தி தளத்தை அமைக்க குறைந்தது 2 புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாகவும், இது தொழில்நுட்ப உதவிக்கானதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு இதை ஏற்றுக்கொண்டு புரிந்துணர்வு செய்த பின்பு, உரிய தொழில்நுட்ப கட்டமைப்புகளுக்கான உதவிகளை பெற்ற பின்பு முழுமையான பங்கீடு ஒப்பந்தத்துடன் முறையாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் அடுத்த 45 முதல் 60 நாட்களுக்குள் சமர்ப்பித்து அதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாக்ஸ்கான் அமைக்க திட்டமிட்டு உள்ள 4 முதல் 5 செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் உற்பத்தி லைன்களில் குறைந்தது 1 குஜராத்தில் அமைக்கப்படும். மற்ற 3 நாட்டின் வேறு பகுதிகளில் அமைக்கப்பட உள்ளது, இதற்காக நிலம் தேடும் பணிகளில் பாக்ஸ்கான் இறங்க உள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் யார் முதலில் செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் உற்பத்தியை துவங்குகிறார்கள் என்பதில் பாக்ஸ்கான் மற்றும் வேதாந்தா மத்தியில் போட்டி உருவாகியுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications