செப்டம்பர் மாதத்தின் உற்பத்தி மற்றும் சேவைத் துறை தரவுகளும், அமெரிக்காவின் அதிபர் தேர்தல் முடிவுகளும், குறைந்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கை இந்தியச் சந்தையின் மீதான நம்பிக்கை அன்னிய முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக அமெரிக்கச் சந்தையில் இருந்து அதிகமான முதலீடு குவியவும், இந்திய டெக் துறையில் இக்காலகட்டத்தில் அதிகளவில் முதலீடு குவிய முக்கியக் காரணமாக அமைந்திருப்பது அமெரிக்கத் தேர்தல் ஜோ பிடன் வெற்றி தான்.

இந்நிலையில் நவம்பர் மாதத்தில் மட்டும் இந்தியச் சந்தையில் FPI முதலீட்டாளர்கள் சுமார் 62,951 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்துள்ளனர்.
இதுமட்டும் அல்லாமல் இந்தியப் பங்குச்சந்தையில் எப்போதும் இல்லாத வகையில் FPI முதலீட்டாளர்கள் சுமார் 60,538 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர். தேசியப் பாதுகாப்பு வைப்பகம் தரவுகளின் படி இந்த நவம்பர் மாத 60358 கோடி
ரூபாய் முதலீடு தான் வரலாற்று உச்சமாக உள்ளது.
நவம்பர் 3 முதல் நவம்பர் 27 வரையிலான காலகட்டத்தில் அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் சுமார் 62,951 கோடி ரூபாய் அளவிலான தொகையை இந்தியச் சந்தையில் முதலீடு செய்துள்ளனர். இதில் 60,358 கோடி ரூபாய் தொகையைப் பங்குச்சந்தையிலும், 2,593 கோடி ரூபாய் பங்குகளைக் கடன் சந்தையிலும் முதலீடு செய்துள்ளனர்.
அன்னிய முதலீட்டாளர்கள் தற்போது வல்லரசு நாடுகளைக் காட்டிலும் வளரும் நாடுகளில் அதிகளவில் முதலீடு செய்ய விருப்பம் காட்டி வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணம் கொரோனாவால் உலகில் அனைத்து நாடுகளும் மோசமான பொருளாதார வீழ்ச்சியை அடைந்துள்ள நிலையில் வளரும் நாடுகளின் வளர்ச்சி விகிதம் தற்போது மிகவும் அதிகமாக உள்ளது.
இதன் எதிரொலியாகச் சர்வதேசச் சந்தை முதலீட்டாளர்கள் தற்போது இந்தியாவில் வளர்ச்சி வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் காரணத்தால் நவம்பர் மாதத்தில் சுமார் 62,951 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.
இதேபோலே அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியாவைத் தாண்டி அதிகளவில் தைவான் மற்றும் தென் கொரியா நாடுகளில் அதிகளவில் முதலீடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications