மும்பை: ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில் இருந்து 14,800 கோடி ரூபாயை திரும்ப பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) முடிவுகள் வெளியிடப்பட்டன. அன்றைய தினம் இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.
தனி கட்சியாக பாஜக ஆட்சி அமைக்கும் என்ற கணிப்பு பொய்யானதன் விளைவாக தேர்தல் முடிவுகள் வெளியான தினத்தில் பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதனிடையே ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில் இருந்து 14,800 கோடி ரூபாயை திரும்ப பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. தேர்தல் சீசனான மே மாதத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் கிட்டதட்ட 25,586 கோடி ரூபாயை இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தன. ஆனால் தற்போது வெளியாகி இருக்கக்கூடிய விவரங்களின் அடிப்படையில் ஜூன் 3 முதல் 7ஆம் தேதி வரையிலான முதல் ஒரு வார காலத்தில் இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் 14,794 கோடியை திரும்ப பெற்றுள்ளன.

மக்களவைத் தேர்தல் முடிவுகளே இதற்கு முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது. ஜூன் மாதத்தின் முதல் பங்கு வர்த்தக நாளான ஜூன் 3ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத உச்சத்தை தொட்டன. இதற்கு காரணம் பாரதிய ஜனதா கட்சி 400 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் தேர்தல் முடிவுகள் அதற்கு நேர்மாறாக அமைந்து கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இதுவே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை திரும்ப பெறுவதற்கு காரணம் என மார்னிங் ஸ்டார் இன்வெஸ்ட்மென்ட் ரிசர்ச் இந்தியா அமைப்பை அமைப்பின் இயக்குனர் ஹிமான்சு ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மக்களவைத் தேர்தலில் எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மை பெற முடியாது என்ற ஒரு குழப்பமான சூழல் நிலவியதன் காரணமாகவே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெயிட் அண்ட் வாட்ச் என்று அணுகுமுறையை பின்பற்றி வந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்திய பங்குச் சந்தையின் மதிப்பு மிக அதிகமாக இருப்பதாக வெளிநாட்டு நிறுவனங்கள் கருதுவதாகவும் விலை குறைவான சந்தையை நோக்கி திரும்ப வேண்டும் என விரும்பியதாகவும் கூறும் ஜியோஜித் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் சிறப்பு அதிகாரியான விஜயகுமார், சீனாவின் பங்குகளின் மதிப்பு இந்திய பங்குச்சந்தையை விட குறைவாக இருப்பதன் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடிய ஒரு பங்குச்சந்தையாக சீனா மாறி வருகிறது என்கிறார். இதன் காரணமாகவே இந்தியாவில் இருக்கும் முதலீடுகளை திரும்ப பெற்றுக் கொண்டு இவர்கள் சீனாவை நோக்கி படையெடுக்கின்றனர் என விளக்கம் அளித்துள்ளார்.
அதே வேளையில் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் கடன் சந்தையில் 4000 கோடி ரூபாயை முதலீடு செய்திருப்பதை சுட்டிக்காட்டும் நிபுணர்கள் இந்தியாவின் கடன் சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் வருங்காலங்களில் கண்டிப்பாக அதிகரிக்கும் என்றே கூறுகின்றனர். மணிகண்ட்ரோல் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில் இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை வெளிநாட்டு நிறுவனங்கள் 38,158 கோடி ரூபாயை ஈக்விட்டி சந்தையிலிருந்து திரும்ப பெற்றுள்ளன, அதே வேளையில் 56,676 கோடி ரூபாயை கடன் சந்தையில் முதலீடு செய்துள்ளன.
Story written by: Devika
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications