இந்தியாவில் உற்பத்தி மற்றும் சேவை சந்தை செப்டம்பர் மாதம் முதல் தொடர் வளர்ச்சிப் பாதையில் இருந்து வரும் அதேவேளையில் ஜூன் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் -23.9 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடைந்திருந்த நிலையில் செப்டம்பர் காலாண்டில் இதன் அளவு -10 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்திய பொருளாதாரம் தொடர்ந்து 2 காலாண்டுகளாகச் சரிவு பாதையில் இருப்பதால் ரெசிஷனுக்குத் தள்ளப்படும் அபாயம் இருந்தாலும், இரு காலாண்டில் 50 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது பொருளாதாரம். இதோடு அமெரிக்கத் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி இந்தியாவிற்குப் பல சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இதன் எதிரொலியாக இந்தியாவில் நவம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 49,553 கோடி ரூபாய் தொகையை அன்னிய முதலீட்டாளர்கள் செய்துள்ளனர்.
நவம்பர் மாதம்
நவம்பர் மாதத்தில் 3 வாரங்கள் மட்டுமே முடிந்துள்ள நிலையில் FPI எனப்படும் Foreign portfolio investors சர்வதேச பொருளாதாரம் தொடர்ந்த மந்தமாகவும், நிலையற்ற தன்மையில் இருக்கும் இந்தச் சூழ்நிலையில் இந்திய சந்தை மற்றும் இந்திய பொருளாதார வளர்ச்சி மீது நம்பிக்கை வைத்து சுமார் 49,553 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்துள்ளனர்.
முதலீடு
நவம்பர் 3 முதல் 20ஆம் தேதி வரையில் அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் செய்த 49,553 கோடி ரூபாய் முதலீட்டில் 44,378 கோடி ரூபாய் அளவிலான தொகை நேரடியாகப் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளனர். மீதமுள்ள 5,175 கோடி ரூபாய் தொகையைக் கடன் சந்தையில் முதலீடு செய்துள்ளனர்.
அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள்
ஆபத்தான கட்டத்தில் நிலையான லாபம் வருவதற்காக மட்டுமே அன்னிய முதலீட்டாளர்கள் வெளிநாட்டுக் கடன் சந்தையில் முதலீடு செய்வார்கள். இந்நிலையில் அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்களின் 89 சதவீத முதலீடு பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகச் சாத்தியக்கூறுகள் வெளிப்படுகிறது.
அக்டோபர் மாதம்
இதே அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் அக்டோபர் மாதம் முழுவதும் இந்திய சந்தையில் வெறும் 22,033 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை மட்டுமே செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தென்கொரியா மற்றும் தைவான்
இதே காலகட்டத்தில் இந்திய சந்தையைப் போல் தென்கொரியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளிலும் அதிகளவிலான முதலீட்டை குவிந்து முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. இதனால் இந்தியாவில் அடுத்த மாதமும் சிறப்பான அன்னிய முதலீடுகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications