வெளிநாட்டு முதலீடுகளால் அதிர்ந்த பங்குச் சந்தை.. செப்டம்பர் பாதி வரை 32,779 கோடிக்கு பங்குகள் சேல்.!

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் செப்டம்பர் முதல் பாதியில் 17 துறைகளில் ரூ.32,779 கோடி மதிப்புள்ள இந்திய பங்குகளை வாங்கியுள்ளனர். இவற்றில் நிதிச் சேவைகள் துறையில் அதிகபட்சமாக ரூ.12,253 கோடிக்கு பங்குகள் வாங்கப்பட்டுள்ளது. அதேபோல், ஹெல்த்கேர், நுகர்வோர் பொருட்கள் மற்றும் எஃப்எம்சிஜி துறைகளும் குறிப்பிடத்தக்க முதலீடுகளைக் கண்டன. இருப்பினும், ஆட்டோமொபைல் துறை ஆனது ரூ.1,983 கோடி அதிகபட்சமாக விற்பனையை கண்டுள்ளது.

அமெரிக்க வட்டி விகித குறைப்பு, இந்திய பங்குச் சந்தையில் ஏற்பட்ட லாபம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வெளி நாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் தங்களது முதலீடுகளை அதிகரித்துள்ளனர். NSDL வெளியிட்ட தரவுகளின்படி, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் செப்டம்பர் முதல் 15 நாட்களில் 17 துறைகளில் ரூ.32,779 கோடி மதிப்புள்ள இந்திய பங்குகளை வாங்கியுள்ளனர்.

வெளிநாட்டு முதலீடுகளால் அதிர்ந்த பங்குச் சந்தை.. செப்டம்பர் பாதி வரை 32,779 கோடிக்கு பங்குகள் சேல்.!

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக தொகைக்கு பங்குகளை விற்பனை செய்த பின்னர், செப்டம்பர் முதல் பாதியில் நிதி சேவைகள் துறையில் ரூ.12,253 கோடிக்கு அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். இதனால், நிதிச் சேவைகள் அதிகபட்ச வரவுகளைப் பெற்றன. நிஃப்டி வங்கி மற்றும் நிஃப்டி நிதிச் சேவை குறியீடுகள் முறையே 6.13% மற்றும் 6.95% அதிகரித்தன. ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தத் துறையின் பங்குகளில் இருந்து ரூ.64,932 கோடியை குவித்துள்ளனர்.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதக் குறைப்பு ஆனது, வங்கிகள் மற்றும் NBFC களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வத்துக்கு ஒரு முக்கிய பங்கு ஆகும் எனவும், இது ஒட்டுமொத்த சந்தையுடன் ஒப்பிடும்போது அவற்றின் கவர்ச்சிகரமான மதிப்பீடுகள் இத்துறையில் வெளிநாட்டு முதலீட்டிற்கு மேலும் வழிவகுக்கும் என்று கோடக் இன்ஸ்டிடியூஷனல் தலைமை நிர்வாக அதிகாரி பிரதிக் குப்தா கூறியுள்ளார். மேலும், விகிதக் குறைப்பு அளவு 50 அடிப்படைப் புள்ளிகளில் அதிகமாக இருப்பதால், உலகளாவிய ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டு நிதிச் சேவைத் துறையில் மேலும் வரவுகள் சாத்தியமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் மாதத்தில் முதல் பாதியில் ஹெல்த்கேர் துறையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.3,652 கோடிக்கு வாங்கிய நிலையில், தொடர்ந்து இந்த மாதத்தில் இதுவரை ரூ.5,831 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர். இதனால்,ஹெல்த்கேர் துறை தொடர்ந்து வெளிநாட்டு வரவுகளைக் கண்டு வருகிறது. இது உலகளவிலான புதிய நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான தடுப்பூசிகள் மற்றும் பிற மருந்து தயாரிப்புகளுக்கான தேவைகள் அதிகரித்துள்ளதால்,ஹெல்த்கேர் துறை வளர்ச்சியடைவதாக அல்பானிட்டியின் இணை நிறுவனர் யு ஆர் பட் கூறியுள்ளார்.

அதேபோல், பங்குச் சந்தை உச்சத்தில், நுகர்வோர் பொருட்கள் மற்றும் எஃப்எம்சிஜி ஆகியவை வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளது. செப்டம்பர் முதல் பாதியில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.2,226 கோடி மற்றும் ரூ.1,372 கோடி மதிப்புள்ள நுகர்வோர் பொருட்கள் மற்றும் எஃப் எம்சிஜி துறைகளில் பங்குகளை வாங்கியுள்ளனர். நுகர்வுத் துறைகள் குறைவான செயல்திறனால், தேவை அதிகரிப்பு இந்தத் துறைகளில் வெளிநாட்டு முதலீட்டுக்கு வழிவகுக்கிறது என்றும் குப்தா கூறியுள்ளார்.

அதேபோல், ரியல் எஸ்டேட், கேபிடல் குட்ஸ் மற்றும் பவர் துறைகள் முறையே ரூ.2,903 கோடி, ரூ.1,778 கோடி மற்றும் ரூ.1,167 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தத் துறைகளில் பங்குகளை விற்பனை செய்த நிலையில், செப்டம்பர் முதல் 15 நாட்களில் அதிகமாக வாங்கியுள்ளதாகவும் குப்தா கூறியுள்ளார்.

மேலும், மின்சாரம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற துறைகளிலும் இந்த முதலீடுகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று குப்தா கூறினார். குறிப்பாக, ரியல் எஸ்டேட் மற்றும் மின் துறை கடந்த மாதம் ரூ.1,100 கோடிக்கு மேல் வெளிநாட்டு முதலீட்டாளர்களால் விற்பனை செய்யப்பட்டது. அமெரிக்க ஃபெட் ரிசர்வ் வங்கியின் எதிர்பார்ப்புகள், இந்தியாவில் ஒரு ஆழமான விகிதக் குறைப்பு இந்த மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மாதத்தின் இந்த முதல் பாதியில் 6 துறைகளைச் சேர்ந்த ரூ.4,915 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். ஆட்டோமொபைல் துறையானது, கடந்த மாதம் ரூ.2,379 கோடி மதிப்பிலான விற்பனையுடன் ரூ.1,983 கோடியாக அதிக அளவில் வெளிநாட்டு விற்பனையை கண்டுள்ளது. அதேபோல், செப்டம்பர் முதல் 15 நாட்களில் மெட்டல் மற்றும் சுரங்கம் மற்றும் சேவைத் துறைகளில் ரூ.1,857 கோடி மற்றும் ரூ.422 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+