பெட்ரோல், டீசல் காலி.. Bunk-களை அடுத்தடுத்து மூடும் நிலை..? என்ன நடக்குது?!

ஈரான் படைகள் ஹார்முஸ் நீரிணையை முடக்கியுள்ளது, பாம் அல் மண்டெப் வழித்தடத்தை ஹவுதி படைகள் முடக்கியுள்ளது, சூயஸ் கால்வாய் வழியாக வரும் சவுதி அரேபியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் கிழக்கு - மேற்கு பைப்லைன் மீது ஹவுதி படைகள் தாக்குதல் நடத்தியதால் வளைகுடாவில் இருந்து வரும் சப்ளை மொத்தமாக முடங்கியுள்ளது.

இந்த நிலையில் சவுதி மூலம் சுயஸ் கால்வாய் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் சப்ளை மொத்தமாக முடங்கிய காரணத்தால் ஒவ்வொரு நாடும் மாற்று சப்ளையர்களை தேடி வருகிறது. இந்த திடீர் சப்ளை தட்டுப்பாட்டைச் சரிவர நிர்வாகம் செய்ய முடியாமல் மாட்டிக்கொண்ட பிரான்ஸ் அரசு தற்போது பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு விளிம்பின் ஓரத்தில் உள்ளது.

பெட்ரோல், டீசல் காலி.. Bunk-களை அடுத்தடுத்து மூடும் நிலை..? என்ன நடக்குது?!

பிரான்ஸ் நாட்டில் இருந்து தற்போது வெளியாகியுள்ள தரவுகள் படி, அந்நாட்டில் 11 சதவீத பெட்ரோல் பங்க்-களில் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருவதாகவும், 9ல் ஒரு பெட்ரோல் பங்க்-களில் பெட்ரோல் அல்லது டீசல் இல்லாமல் இருப்பதாகவும், பாதிப்பு அளவுகள் கடந்த 4 நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக சில தொலைதூர பகுதிகளில் பெட்ரோல் இருப்ப வேகமாகக் குறைந்து வருவதால் அடுத்த சில நாட்களில் வர்த்தகம் முடங்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Also Read

இதன் எதிரொலியாக பிரான்ஸ் நாட்டில் எரிபொருள் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இன்று ரீடைல் சந்தையில் ஒரு லிட்டர் டீசல் 2.70 யூரோ வரையிலும், பெட்ரோல் 2.160 முதல் 2.250 யூரோ வரையில் பெட்ரோலின் வகை அடிப்படையில் விற்கப்படுகிறது.

பிரான்ஸ் அரசு அந்நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சரி செய்ய மாற்று சப்ளையர்களை தேடும் பணிகளை துவங்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு மிகப்பெரிய சப்ளையராக இருந்து வந்த ரஷ்யாவிலும் உக்ரைன் தாக்குதலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு.

Recommended For You

4-5 வருடங்களாக ரஷ்யா- உக்ரைன் உடனான போர் காரணமாக மேற்கத்திய நாடுகள் விதித்த தடையின் விளைவாக எரிபொருள், கச்சா எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் இந்த இக்கட்டான சூழ்நிலையில் அந்நாட்டின் கடன் அளவு யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்நாட்டின் ஜிடிபி காட்டிலும் 119.3 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. இதேபோல் 2027ஆம் ஆண்டு முடிவிற்குள் கடன் அளழு 121.7 சதவீதமாக உயரும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+