உலகின் 7வது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் பிரான்ஸ் நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் சார்ந்த நோய்தொற்று அளவை கட்டுப்படுத்தும் முயற்சியாக ஜனவரி மாதம் முதல் அனைத்து இளைஞர்களுக்கும் இலவச ஆணுறைகள் வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அறிவித்தார்.
பிரான்ஸ் நாட்டின் வளர்ச்சியும், பொருளாதாரமும் வளர்ச்சி பாதையில் இருக்கும் நிலையில் அந்நாட்டின் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் sexually transmitted infections பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.
பிரான்ஸ் அதிபர்
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவில் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் sexually transmitted infections-ஐ தடுக்க ஜனவரி மாதம் முதல் அனைத்து இளைஞர்களுக்கும் இலவச ஆணுறைகள் வழங்கப்பட உள்ள புதிய நடவடிக்கையை அறிவித்தார்.
இம்மானுவேல் மக்ரோன்
இந்த நடவடிக்கை மூலம் கருத்தடை மற்றும் STI ஸ்கிரீனிங் உட்படத் தனிப்பட்ட சுகாதாரத்தைப் பொது மக்கள் மத்தியில் மேம்படுத்தும் ஒரு பெரிய சுகாதார முன்முயற்சியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இலவச காண்டம் அளிப்பதை "ஒரு சிறிய புரட்சி" என்றும் கூறியுள்ளார்.
இலவச காண்டம்
கடந்த சில ஆண்டுகளில் பிரான்ஸ் நாட்டில் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்த் தொற்றுகளின் விகிதம் அதிகரித்து வருகிறது. இதில் முக்கியமாகக் கிளமிடியா மற்றும் கோனோரியா ஆகியவற்றின் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பிரான்ஸ் STI தொற்று விகிதங்கள் 30% அதிகரித்துள்ளது.
நோய் தொற்று
இந்த நோய்களால் அதிகமாகப் பாதிக்கப்படுவது இளைஞர்கள் என்பதால் இதைச் சரி செய்யத் தேவையான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்காகவே அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் நேரடியாக இந்த அறிவிப்பை டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இலவச ஆணுறை கொள்கை
இலவச ஆணுறை கொள்கை ஆரம்பத்தில் 18 முதல் 25 வயதுடையவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பல சமுக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் மத்தியிலான கோரிக்கைகள், விமர்சனங்களைத் தொடர்ந்து மைனர்களுக்கும் இலவச ஆணுறை கொள்கை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
பணம்
2018 ஆம் ஆண்டு முதல், பிரான்ஸ் அரசு மக்கள் வாங்கும் ஆணுறைகளுக்கான பணத்தை மருந்துச் சீட்டுச் சமர்பிப்பது மூலம் திருப்பிச் செலுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் விரிவாக்கம் தான் தற்போது ஜனவரி 2023 முதல் 25 வரையில் அனைவருக்கும் இலவசமாக ஆணுறை வழங்கும் கொள்கை தற்போது உருவாக்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு முக்கியம் அமைச்சரே
பிரான்ஸ் நாட்டில் 25 வயது மற்றும் அதற்கும் குறைவான வயதுடைய பெண்களுக்கு 2021 ஆம் ஆண்டு முதல் இலவசமாகப் பிறப்புக் கட்டுப்பாட்டுப் பொருட்களைப் பெறலாம் என்ற விதி நடைமுறையில் உள்ளது. தற்போது ஆண்களுக்கும், மைனர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
ஆரோக்கியம்
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உற்பத்தி, வர்த்தகம், நிதி நிலை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு மக்களின் ஆரோக்கியமும் முக்கியம், இதனாலேயே உலக நாடுகள் அனைத்தும் குழந்தை இறப்பு விகிதம், பிரசவத்தின் போது தாய் இறப்பு விகிதம், இரத்த சோகையின் பாதிப்பு, கர்ப்பிணி தாய்மார்களிடையே இரத்த சோகையின் பாதிப்பு போன்ற பல முக்கியமான விஷயத்தில் அதிகப்படியான கவனம் செலுத்தி வருகின்றது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications