சுத்தி அடிவாங்கும் டிக்டாக் தற்போது பிரான்ஸ் நாட்டிலும் பெரிய அடி வாங்கியுள்ளது, ஆனால் உலகின் பிற நாடுகளுக்கு ஒரு படிக்கு மேலே சென்று பல முன்னணி செயலிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
டிஜிட்டல் உலகம் வேகமாக வளர்வதை கண்டு மகிழ்ச்சி அடைவதை காட்டிலும் நாளுக்கு பல பிரச்சனைகள் உருவாக்கி வருகிறது. ஒருபக்கம் டிஜிட்டல் வங்கி சேவை கீழ் பணத்தை மோசடியாளர்கள் டிசைன் டிசைனாக திருடி வரும் வேளையில், மறுபுறம் டிஜிட்டல் சேவை செயலிகள் மூலம் தனிநபர் திருட்டு அதிகளவில் நடக்கிறது.
இந்த நிலையில் பிரான்ஸ் அரசு உலகின் முன்னணி செயலிகளுக்கு மிகப்பெரிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
தகவல் பாதுகாப்பு
டிஜிட்டல் உலகில் தகவல் பாதுகாப்பு என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது, அதிலும் குறிப்பாக சீன செயலிகளை பற்றி கேட்கவே வேண்டியது இல்லை. உலகின் பல நாடுகள் சீனாவின் டிக்டாக் செயலிகளை தடை செய்து வரும் வேளையில் இந்த பட்டியலில் பிரான்ஸ் நாடும் இணைந்துள்ளது.
டிக்டாக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம்
பிரான்ஸ் அரசு வெளியிட்ட அறிவிப்பில் இனி அந்நாட்டு அரசு அதிகாரிகள், அரசுக்கு சொந்தமான மற்றும் அரசுக்கு தொடர்பான கருவிகளில் டிக்டாக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் பிற பொழுதுபோக்கு செயலிகளை தடை செய்வதாக பிரான்ஸ் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
டிக்டாக் செயலி
பிரபலமான வீடியோ பகிர்வு செயலியும், சீன அரசுடன் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்படும் டிக்டாக் செயலிக்கு உலகின் பல நாடுகள் முழுமையாக தடை விதித்தும், அமெரிக்கா போன்ற சில முன்னணி வல்லரசு நாடுகள் அரசு அதிகாரிகள், அரசுக்கு சொந்தமான மற்றும் அரசுக்கு தொடர்பான கருவிகளில் மட்டும் டிக்டாக்-ஐ தடை செய்து வருகிறது. தற்போது பிரான்ஸ் நாடும் இதை பின்பற்றுகிறது.
ட்விட்டர், இன்ஸ்டாகிராம்
டிக்டாக் செயலி என்றால் புரிந்துக்கொள்ள முடிகிறது, ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் பிற பொழுதுபோக்கு செயலிகளை தடை செய்வதாக பிரான்ஸ் வெள்ளிக்கிழமை அறிவித்ததுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. டிவிட்டர் போன்ற தளங்களை அரசு அதிகாரிகள் முதல் அந்நாட்டின் அதிபர் Emmanuel Macron வரையில் அதிகளவில் பயன்படுத்தி வரும் வேளையில் இந்த கட்டுப்பாடு பெரும் அதிர்ச்சியை டெக் நிறுவனங்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
சைபர்செக்யூரிட்டி ஏஜென்சி
மேலும் இந்த தடை உத்தரவுகளை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டின் சைபர்செக்யூரிட்டி ஏஜென்சி இதை சரியான முறையில் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய உள்ளது எனவும் பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications