நான்காவது முறையாக தொடர்ச்சியாக உலகின் பணக்காரப் பெண்மணியாக ஃபிரான்ஷுவா பெட்டன்கோர்ட் (francois bettencourt) மேயர்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் எல் ஓரியாலின் உரிமையாளர். எழுத்தாளர் மற்றும் பியானோ இசைக் கலைஞர் கூட.
70 வயதான ஃபிரான்ஷுவா பெட்டன்கோர்ட் மேயர்ஸின் நிகர சொத்து மதிப்பு ரூ.83,000 கோடி ஆகும். பிரஞ்சு பியூட்டி நிறுவனமான எல் ஓரியால் குழுமத்தில் (L'Oreal SA) கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் இணை உரிமையாளராக உள்ளார்.

கடந்த ஆண்டு இவர் 100 பில்லியன் டாலர் சம்பாதித்த முதல் பெண்மணியாக உருவெடுத்தார். புளூம்பெர்க் பில்லியனர் பட்டியலில் அவரது எல் ஓரியால் நிறுவனத்தின் பங்கு பெட்டன்கோர்ட் மேயர்ஸை உயர்ந்த இடத்துக்குக் கொண்டு சென்றுள்ளது.
இதன் மூலம் அவர் இந்தியப் பணக்காரர்களான முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, கௌதம் அதானி ஆகியோரை முந்தியுள்ளார்.
எல் ஓரியால் நிறுவனத்தில் மேயர்ஸ் அதிக பங்குகளை வைத்துள்ளார். அதன் மதிப்பு ரூ.22321 கோடி ஆகும்.
மேயர்ஸ் அவரது நிறுவனத்தின் போர்டில் துணைத் தலைவராக இருந்தார். அத்துடன் டெத்திஸ் இன்வெஸ்ட் எஸ்ஏஎஸ் நிறுவனத்தின் தலைவராகவும் பதவி வகித்தார். அவரது கணவர் ஜான் பியரி மேயர்ஸ் சிஇஓவாக இருந்தார்.
1909 ஆண்டில் பெட்டன்கோர்ட் மேயர்ஸின் தாத்தா யூஜின் ஸ்கூலர் லோரியால் நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனம் ஹேர் டை தயாரித்து விற்றது. ஹேர் டையை யூஜின் ஸ்கூலர் கண்டுபிடித்தார்.
பெரும் பணக்காரராக இருந்தபோதும் மேயர்ஸ் எப்போதும் மீடியா வெளிச்சத்தை தவிர்த்து வந்தார். எளிமையான வாழ்க்கையை அவர் வாழ்ந்து வந்தார். பெட்டன்கோர்ட் மேயர்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் பொதுவில் வர்த்தகம் செய்யப்படும் எல் ஓரியால் நிறுவனத்தின் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் வைத்துள்ளனர்.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications