இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இலவசமாக ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கு பல காலக்கேடுகளை வழங்கியுள்ளது. ஏனெனில் ஆதார் கார்டு தான் முக்கிய அடையாள ஆவணமாக இருக்கிறது. பேங்க் அக்கவுண்ட் திறப்பது முதல் பள்ளியில் சேர்ப்பது வரை அனைத்திற்கும் ஆதார் கார்டை தான் கேட்கின்றனர். எனவே ஆதார் கார்டில் உங்களுடைய முகவரி மற்றும் பிற விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும். ஆதார் விவரங்களில் பிழை இருந்தால் உடனே அதை ஆன்லைன் மூலமாக புதுப்பிப்பது அவசியம்.
இதற்காக UIDAI ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆன்லைனில் இலவசமாக ஆதார் விவரங்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஜூன் 2026 வரை தான் இந்த இலவச சேவை கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் பொது மக்களுக்கு உதவும் வகையில் தற்போது இந்த அவகாசத்தை ஜூன் 14, 2027-ஆம் ஆண்டு வரை UIDAI நீட்டித்துள்ளது. இன்னும் ஒரு வருடத்திற்கு மேல் நேரம் இருக்கிறதே என்று அசால்டாக விட்டுவிடக்கூடாது. ஏனெனில் ஆதார் விபரங்களில் ஒரு சிறு பிழை இருந்தாலும் அது பிரச்சினையை ஏற்படுத்த கூடும்.
இந்த சேவை யாருக்கெல்லாம் பயன் தரும்?: நீங்கள் ஆதார் கார்டை வாங்கி பல வருடங்கள் ஆகிறது என்று வைத்துக் கொள்வோம். இதுவரையில் ஒரு முறை கூட புதுப்பிக்க வில்லை என்றால் நீங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக ஒருவர் ஆதார் கார்டு வழங்கப்பட்டதிலிருந்து பல வீடுகளுக்கு மாறி இருக்கலாம். அப்படி மாறி இருக்கும் பட்சத்தில் அவருடைய முகவரி விபரங்கள் ஆதார் கார்டில் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை புதுப்பிக்கப்படவில்லை என்றால், இந்த இலவச சேவையை பயன்படுத்தி அப்டேட் செய்து கொள்ளலாம். சரி ஆதார் கார்டு புதுப்பிக்கும் சேவை எல்லா இடங்களிலும் பொருந்துமா? என்று தானே கேட்கிறீர்கள். நீங்கள் ஆதார் சேவை மையங்களுக்கு சென்றால் கண்டிப்பாக கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் ஆன்லைன் மூலமாக இலவசமாக செய்து கொள்ளலாம்.

சமீபத்தில் UIDAI ஒரு அறிவிப்பை வெளியிட்டது. ஏற்கனவே ஆதார் சேவைகளைப் பெற mAadhaar என்ற ஆப் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது Aadhaar என்ற புது அப்ளிகேஷனை UIDAI உருவாக்கியுள்ளது. இது முன்பு இருந்த அப்ளிகேஷனை விட மிகவும் வேகமாக மற்றும் பாதுகாப்பான சேவையை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷனின் சிறப்பு என்ன தெரியுமா? இந்தியாவின் முக்கியமான 13 மொழிகளில் கிடைக்கும் வகையில் ஆதார் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்-பில் எண்ணற்ற புது வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
நாம் எங்கெங்கெல்லாம் ஆதார் கார்டை வழங்குகிறோமோ அந்த இடங்களுக்கு எல்லாம் தேவையான விவரங்களை மட்டும் வழங்கி மீதி விவரங்களை லாக் செய்யும் வசதி அறிமுகப்பட்டுள்ளது. உதாரணமாக உங்கள் ஆதார் கார்டை நீங்கள் பகிரும் போது எந்தெந்த விவரங்கள் பிறருக்கு காண்பிக்கப்பட வேண்டும் என்பதை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதோட ஃபிங்கர் பிரிண்ட் போன்ற வசதிகள் இருப்பதால் உங்களுடைய ஆதார் கார்டை லாக் செய்து வைக்கும் வசதியும் வந்துள்ளது. ஆனால் ஏற்கனவே mAadhaar அப்ளிகேஷனை பயன்படுத்தியவர்கள் இந்த புது ஆதார் அப்ளிகேஷனில் நேரடியாக உங்களுடைய டேட்டாவை கொண்டு வர முடியாது. நீங்கள் மீண்டும் ஒருமுறை ஆதார் ஆப்-பை ப்ளே ஸ்டோரில் டவுன்லோட் செய்து உள்நுழைய வேண்டும். பின்னர் ஏற்கனவே எம்ஆதாரில் பெற்ற சேவைகளை இதில் பெற முடியும்.


Click it and Unblock the Notifications