இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இதற்கு முன்னதாக ஆதார் வைத்திருப்பவர்களுக்கு தங்களுடைய தகவல்களை இலவசமாக புதுப்பித்துக்கொள்ள பல்வேறு காலக்கெடுக்களை வழங்கியது. அப்படி தான் டிசம்பர் 14 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. எனவே நாளை முதல் ஆதார் விவரங்களை புதுப்பிப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. இன்றைய தினத்தை பயன்படுத்தி ஆதார் விவரங்களில் மாற்றம் செய்ய விரும்புபவர்கள் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒருமுறை ஆதார் விவரங்களை புதுப்பித்துக் கொள்ள UIDAI வலியுறுத்துகிறது. ஏனெனில் சிலர் நகரம் விட்டு வேறு நகரத்திற்கு சென்றிருப்பார்கள், சிலர் தங்களுடைய விவரங்களில் மாற்றம் செய்திருப்பார்கள். இதுபோன்ற நபர்களும் ஆதார் கார்டில் விவரங்களை புதுப்பித்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.

ஏனெனில் அரசாங்க மானியங்கள் பெறுவது முதல் வங்கி கணக்கு திறப்பது வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. ஆதார் கார்டில் ஒரு தகவலும் மற்றும் பிற ஆவணங்களில் வேறு தகவலும் இருந்தால் அது பிற்காலத்தில் சிக்கலை ஏற்படுத்தலாம். இன்றுடன் இந்த இலவச காலக்கெடு முடியவுள்ளது. ஒருவேளை அரசாங்கம் இதை நீட்டித்தால், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் செய்திகளின் வாயிலாக வெளியாகும்.
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் ஆதார் விவரங்களை புதுப்பிக்க வேண்டுமா?: ஆதார் விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டியது கட்டாயம் கிடையாது. ஆனால் ஆதார் விவரங்களின் துல்லிய தன்மையை சரி பார்க்கும் பொருட்டு புதுப்பித்துக்கொள்ள UIDAI பரிந்துரைக்கிறது.
ஆதார் விவரங்களை ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் வாயிலாக புதுப்பித்துக் கொள்ளலாம். ஆனால் சில தகவல்களை ஆன்லைனில் புதுப்பிக்க முடியாது. பெயர், பிறந்த தேதி, மொபைல் நம்பர் போன்ற அப்டேட்களை செய்வதற்கு கண்டிப்பாக ஆதார் பதிவு மையங்களைத்தான் பார்வையிட வேண்டும். அதோடு பெயர் பிறந்த தேதி போன்றவற்றில் மாற்றம் செய்ய வரம்புகள் உள்ளன.
திருமணமான பெண்கள் சிலர் தங்கள் கணவரின் பெயரைச் சேர்த்து பயன்படுத்த தொடங்கியிருப்பார்கள். இதுபோன்ற நபர்களும் ஆதார் கார்டில் தங்களுடைய பெயரை மாற்றம் செய்து கொள்ளலாம். ஆனால் பெயர் மாற்றத்தை 2 முறை மட்டுமே செய்ய முடியும்.
அதற்கு மேல் மாற்றம் செய்ய UIDAI-இன் அதிகாரப்பூர்வ அனுமதி பெற வேண்டும். உங்கள் விவரங்களை புதுப்பிப்பதற்கு அருகில் இருக்கும் ஆதார் பதிவு மையத்தை பார்வையிடலாம். அருகில் இருக்கும் ஆதார் பதிவு மையங்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள புவன் ஆதார் போர்ட்டலில் உள்ள "சென்டர் நியர் பை" என்ற டூலை பயன்படுத்தி உங்களுடைய பின்கோடை வழங்கினால் அருகில் இருக்கும் ஆதார் மையங்களை கண்டுபிடித்து விடலாம்.
ஆதார் கார்டை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி?:
ஸ்டெப் 1: ஆதார் கார்டை ஆன்லைனில் புதுப்பிக்க முதலில் myAadhaar போர்ட்டலுக்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: "லாகின்" என்பதை கிளிக் செய்து உங்கள் ஆதார் நம்பர், கேப்சா கோடு உள்ளிட்ட விவரங்களை வழங்கி "சென்ட் ஒடிபி" என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: உள்நுழைந்ததும் "டாக்குமெண்ட் அப்டேட்" என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: அங்கு கூறப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை படித்து தெரிந்து கொண்டு "நெக்ஸ்ட்" என்பதைக் கிளிக் செய்யவும். மேலும் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் சரியானவை என்பதை கூறும் வகையில் பாக்சை கிளிக் செய்த "நெக்ஸ்ட்" என்பதை மீண்டும் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 5: அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று தொடர்பான ஆவணங்களை அப்லோட் செய்து "சப்மிட்" என்பதைக் கிளிக் செய்யவும். அதன் பிறகு சர்வீஸ் ரெக்வஸ்ட் நம்பர் (SRN) உங்களுடைய ஈமெயிலுக்கு அனுப்பப்படும். இந்த நம்பரை வைத்து புதுப்பிப்பு நிலையை நீங்கள் சரி பார்த்துக் கொள்ளலாம்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications