ஆதார் கார்டு இன்று நாட்டில் பயன்படுத்தப்படும் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. வங்கி கணக்கு தொடங்குவது. பள்ளி கல்லூரிகளில் சேர்வது. அரசு திட்டங்களில் பயன்பெறுவது என பலவற்றுக்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. எனவே ஆதார் கார்டில் உள்ள விபரங்கள் அனைத்தும் துல்லியமானதாக இருக்க வேண்டும். சிலர் வீடு மாறி இருப்பார்கள். இதனால் முகவரி மாற்றம் செய்யப்பட வேண்டிய சூழல் ஏற்படலாம். இது போன்ற நபர்களும் கண்டிப்பாக ஆதார் கார்டில் முகவரி விவரங்களை புதுப்பித்திருக்க வேண்டும்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் விவரங்களை புதுப்பித்து வைத்துக்கொள்ள பரிந்துரைக்கிறது. ஆனால் இந்த புதுப்பிப்பு கட்டாயம் இல்லை. இருந்தாலும் சிலர் 10 ஆண்டுகளுக்குள் தங்கள் மொபைல் நம்பரை மாற்றி இருப்பார்கள், வீடு மாறி இருப்பார்கள், சிலருக்கு திருமணம் ஆகி தங்கள் கணவரின் பெயரை சேர்த்து பயன்படுத்த தொடங்கி இருப்பார்கள். இதனால்தான் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் விவரங்களை புதுப்பிக்க UIDAI பரிந்துரைக்கிறது. ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பித்துக் கொள்வதற்கு டிசம்பர் 14, 2024 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் விதிமுறைகள் 2016-இன் படி ஒரு ஆதார் கார்டு வைத்திருப்பவர், தங்களுடைய ஆதார் நம்பர் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்குள் தங்களுடைய விவரங்களை புதுப்பிக்க வேண்டும். இதற்கு முன்னரும் ஆதார் விவரங்களை புதுப்பிக்க பல்வேறு காலக்கெடுக்களை வழங்கிய UIDAI தற்போது டிசம்பர் 14 வரை நீட்டித்துள்ளது. மில்லியன் கணக்கான ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த இலவச சேவை myAadhaar போர்ட்டல் மூலம் மட்டுமே கிடைக்கும்.
ஆதார் நம்பர் ஒரு தனித்துவமான நம்பராகும். மேலும் ஒவ்வொரு நபர்களின் பயோமெட்ரிக் விவரங்களை வைத்து தான் ஆதார் கார்டு வழங்கப்படுகிறது. இதனால் போலியான அடையாளங்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
ஆன்லைனில் ஆதார் விவரங்களை புதுப்பிக்க முடியாதவர்கள் அருகில் இருக்கும் ஆதார் பதிவு மையங்களுக்கு சென்று புதுப்பித்துக் கொள்ளலாம். ஒரு வேலை காலக்கெடு முடிந்த பிறகு புதுப்பித்தால் 50 ரூபாய் சர்வீஸ் கட்டணம் செலுத்தி அப்டேட் செய்து கொள்ளலாம்.

ஆதார் கார்டை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி?:
ஸ்டெப் 1: முதலில் myAadhaar போர்ட்டலுக்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: "லாகின்" என்பதை கிளிக் செய்து உங்கள் ஆதார் நம்பர் கேப்சா கோட் உள்ளிட்ட விவரங்களை வழங்கி "சென்ட் ஒடிபி" என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: உள்நுழைந்ததும் "டாக்குமெண்ட் அப்டேட்" என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: அங்கு கூறப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை படித்து தெரிந்து கொண்டு "நெக்ஸ்ட்" என்பதைக் கிளிக் செய்யவும். மேலும் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் சரியானவை என்பதை கூறும் வகையில் பாக்சை கிளிக் செய்த "நெக்ஸ்ட்" என்பதை மீண்டும் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 5: அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று தொடர்பான ஆவணங்களை அப்லோட் செய்து "சப்மிட்" என்பதைக் கிளிக் செய்யவும். அதன் பிறகு சர்வீஸ் ரெக்வஸ்ட் நம்பர் (SRN) உங்களுடைய ஈமெயிலுக்கு அனுப்பப்படும். இந்த நம்பரை வைத்து புதுப்பிப்பு நிலையை நீங்கள் சரி பார்த்துக் கொள்ளலாம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications