சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு.. பெங்களூரில் பெண்களுக்கு பேருந்து பயணம் இலவசம்!

இன்று சர்வதேச பெண்கள் தினத்தை (மார்ச் 8) முன்னிட்டு பெண்களை கௌரவிக்கும் விதமாகவும், பெண்களை போற்றும் விதமாகவும், பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் பெண் பயணிகளுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

 பேருந்து கட்டணம் இல்லை!

பேருந்து கட்டணம் இல்லை!

பெங்களூரு நகரத்தில் உள்ள பெண்களுக்கு பேருந்து பயணம் இலவசம் எனவும், வஜ்ரா மற்றும் வாயு வஜ்ரா போன்ற முதன்மையான ஏசி வசதியுடன் கூடிய பேருந்துகளிலும் மார்ச் 8 அன்று பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என பிஎம்டிசி கூறியுள்ளது.

 பெண்கள் பாதுகாப்பு!

பெண்கள் பாதுகாப்பு!

பிஎம்டிசி மார்ச் 7 அன்று இந்த இலவச பேருந்து குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த இலவச பயணம் வழங்க முக்கிய காரணங்களையும் கூறியுள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பான பொதுப் போக்குவரத்தை வழங்குதல்,
நகரில் உள்ள பெண்கள் பேருந்துகளில் பயணம் செய்வதன் மூலம் பெங்களூரு நகரின் போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசைக் குறைக்க உதவும்

அதிகப்படியான பொதுப்போக்குவரத்தை நகரத்தில் உயர்த்துவது போன்ற காரணங்களுக்காக இன்று பெண்களுக்கு இலவச போக்குவரத்து சேவையை வழங்குவதாக BMTC அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 பேருந்து போக்குவரத்து!

பேருந்து போக்குவரத்து!

பெங்களூரு நகரில் சராசரியாக 29 லட்சம் பேர் மாநகரப் பேருந்து சேவையை நம்பியுள்ளனர். அதிலும் 20% முதல் 30% வரையிலானவர்கள் பெண் பயணிகள் எனக் கூறப்படுகிறது. இன்று இலவச பேருந்து கட்டண அறிவிப்பைத் தொடர்ந்து 20 லட்சத்திற்கும் பேற்பட்ட பெண்கள் மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இதுவே முதல்முறை!

இதுவே முதல்முறை!

பெங்களூரில் பெண்களுக்கு இலவச நகர பேருந்து சேவையை வழங்குவது இதுவே முதல்முறையாகும். BMTC கடைசியாக ஆகஸ்ட் 15, 2022 அன்று அதன் 25 வருட சேவையை நிறைவு செய்ததற்காக பெங்களூரில் வசிப்பவர்களுக்கு இலவச பயணத்தை வழங்கியது.

 6,600 பேருந்துகள்

6,600 பேருந்துகள்

 

பெங்களூரில் சுமார் 6,600 பேருந்துகள் உள்ளன. அதில் தினமும் அட்டவணைப்படி 5,567 பேருந்துகள் பயணிகள் போக்குவரத்திற்காக இயக்கப்படுகிறது.

இந்த நாள் பெண்களை சமமாக நடத்தவும், பெண்களுக்கு எதிரான பல தடைகளை நீக்கி அவர்களுக்கு போதுமான உதவிகளை அளித்தாலே இந்த நாள் முழுமை பெற்றுவிடும்.

 மகளிர் தினம் விடுமுறை!

மகளிர் தினம் விடுமுறை!

அனைத்து மாநில அரசுகளும் வியக்கும் வகையில் பெண்கள் தினத்தை இன்னும் ஒருபடி மேலே சென்று தெலுங்கானா அரசு மார்ச் 8 அன்று மாநில அரசின் கீழ் வேலை செய்யும் பெண் பணியாளர்களுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது. இது பெண்களுக்கு ஒரு ஹேப்பியான நியூஸ்தான்.

 சர்வதேச பெண்கள் தினம்!

சர்வதேச பெண்கள் தினம்!

பல வருடங்களுக்கு முன்பிருந்தே பெண்கள் இல்லத்தரசிகளாக இருந்து தொழில் முனைவோர்களாக முன்னேறியுள்ளனர். இந்தியாவின் சுதந்திரம் மற்றும் கலாச்சார வரலாற்றில், பெண்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

சர்வதேச பெண்கள் தினத்தின் வரலாறு என்பது நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த போராட்டங்கள், ரத்த தியாகங்கள் என நீண்ட நெடிய வரலாற்றின் தொடர்ச்சி ஆகும். குறிப்பாக அனைத்து துறைகளிலும் பெண்களுக்கான சமஉரிமையை பெறுவதற்காக போராடி வரும் பெண்களின் நீண்ட நெடும் போராட்டமே இந்த நாள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+