இந்திய மக்களைப் பயமுறுத்திய கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பு மருந்து போடப்படும் பணிகளுக்காகக் கடந்த வாரம் மாதிரி சோதனை நடந்தது. இதைத் தொடர்ந்து தற்போது மத்திய அரசு முதற்கட்ட கொரோனா தடுப்பு மருந்து வருகிற ஜனவரி 16ஆம் தேதி முதல் மக்களுக்குப் போட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்கு இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்ற கருத்து மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொரோனா மருந்து இலவசமாகக் கொடுக்க ஆலோசனை செய்து வருகிறது மத்திய நாடாளுமன்ற சுகாதாரப் பிரிவு குழு.
நிதி நெருக்கடியில் இந்தியா
இந்தியாவின் 130 கோடி மக்களுக்குக் கொரோனா தடுப்பு மருந்து வாங்க சுமார் 57,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகத் தொகையைச் செலவாகும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே 2020ல் கொரோனா தொற்றுக் காரணமாக அதிகளவிலான வரி வருமானத்தை இழந்து கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும் மத்திய அரசால் இந்த நிதிச்சுமையை ஏற்க முடியாது.
கொரோனா வைரஸ் செஸ்
இந்த நிதி நெருக்கடியைச் சமாளிக்க மத்திய அரசு பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் அறிக்கையில் புதிதாகக் கொரோனா வைரஸ் செஸ் வரியை விதிக்க ஆலோசனையை ஒருபக்கம் செய்து வருகிறது என எக்னாமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இலவசமாகத் தடுப்பு மருந்து
மறுமுனையில் நாடாளுமன்றத்தின் சுகாதாரப் பிரிவு குழு உலகில் பல நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தை இலவசமாகத் தனது நாட்டு மக்களுக்குக் கொடுக்கும் நிலையில் இந்தியாவிலும் இலவசமாக அளிக்க முடியுமா என்பதை ஆலோசனை செய்யத் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதே குழு கொரோனா தடுப்பு மருந்தை எப்படி நாடு முழுவதும் விநியோகம் செய்வது என்பதையும் மத்திய அரசுடன் இணைந்து ஆலோசனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 16 முதல் தடுப்பு மருந்து
இந்தியாவில் ஜனவரி 16 முதல் சுமார் 3 கோடி மக்களுக்கு முதற்கட்டமாகக் கொரோனா தடுப்பு மருந்தை அளிக்க உள்ளது. இதில் முதல்கட்டமாகச் சுகாதாரப் பிரிவு ஊழியர்கள், கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த மக்கள், இவர்களைத் தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிமுறைகள் உடன் கொரோனா தடுப்பு மருந்து போடப்பட உள்ளது.
இலவச மருந்து
இதன் மூலம் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பேரில் வரி விதிக்கத் திட்டமிடும் மத்திய அரசு மறுமுனையில் வரி மூலம் பெறப்படும் வருமானத்தின் மூலம் அனைவருக்கும் இலவசமாகக் கொரோனா வைரஸ் தடுப்பும் மருந்தை அளிக்க உள்ளதாகத் தெரிகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications