தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் களம் பரபரப்பாகி இருக்கிறது. ஒருபுறம் கூட்டணி பேச்சுகளும் தொகுதி பங்கீடு பேச்சுகளும் நடந்து வருகின்றன. மறுபுறம் அரசியல் கட்சியினர் நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் புதிதாக களம் காண்கிறது விஜயின் தமிழக வெற்றி கழகம். ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், சேலம், வேலூரை ஆகிய மாவட்டங்களில் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அடுத்தகட்டமாக இன்று தஞ்சாவூரில் அவர் நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது விவசாயிகளுக்காக பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். இதில் விவசாயிகளின் பிள்ளைகளின் உயர்கல்வி செலவை அரசே என்ற அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது. கூட்டத்தில் பேசிய விஜய், 2 ஏக்கர் வரை விவசாய நிலம் உள்ள விவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாயிகளின் குடும்பத்தில் யாரும் மத்திய, மாநில அரசின் பணிகளில் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அவர்களின் குழந்தைகளின் பொறியியல் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வகை படிப்புக்களுக்கான அதாவது உயர்கல்விக்கான முழு செலவுகளையும் அரசே ஏற்கும் என்றார்.
இளைஞர்கள் தங்களின் பாதையை அவர்களே தேர்ந்தெடுக்க அரசு வேலைவாய்ப்புகள் மட்டுமின்றி, தனியார் வேலைவாய்ப்புகளுக்கான வழியும் உத்தரவாதமும் உருவாக்கப்படும் என விஜய் அப்போது அறிவித்தார். கல்வி, மருத்துவம், ரேஷன், சாலை வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கே தவெக ஆட்சி முக்கியத்துவம் கொடுக்கும் என அவர் கூறினார்.
டெல்டாகாரன் என்று தன்னைக் குறிப்பிடும் முதலமைச்சர் ஸ்டாலின் விவசாயிகளின் பிரச்சனைகள் பற்றி கவனித்தாரா ன கேள்வி அனுப்பிய விஜய் விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தது திமுக அரசு என குற்றம் சாட்டினார். விஜய் வந்தால் நமக்கு பிழைப்பு போய்விடும் என்று இரண்டு கட்சிகளும் சேர்ந்து சதி செய்கின்றன என்னை முடக்கலாம் ஆனால் ஒவ்வொரு வீட்டில் உள்ள விஜயை முடக்க முடியாது என அப்போது அவர் குறிப்பிட்டார்.
மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசுக்கு உணவுப்பூர்வமான அழுத்தம் கொடுக்க வேண்டும் ஆனால் முதலமைச்சர் கடிதம் மட்டும் எழுதிவிட்டு அமைதியாகிவிடுகிறார் என குறிப்பிட்ட விஜய் , தவெக ஆட்சியில் பாதுகாப்பு பக்காவாக இருக்கும் என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications