முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு எண்ணற்ற நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் செயல்படுத்தப்படும் திட்டம்தான் "நான் முதல்வன் திட்டம்".
நான் முதல்வன் திட்டம், தமிழ்நாட்டில் இருக்கும் நிறுவனங்களுக்கு ஏற்ப இளையஞர்களுக்கு பயிற்சி வழங்கி அவர்களை இன்றைய தலைமுறை தொழில்நுட்பத்திலும், தொழிற்துறையிலும் வேலைக்கு ஆயத்தப்படுத்தும் ஒரு திட்டமாகும். இதற்காக பிரத்தியேக இணையதளமும் உள்ளது.

இதில் வேலைவாய்ப்பு, உயர் கல்விக்கான வழிகாட்டுதல், போட்டி தேர்வுக்கு உதவி செய்தல் என பல்வேறு விஷயங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தின் மூலம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் ரோலுக்கு பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும் ஒரு சிறப்பு கோர்ஸ் உள்ளது.
இன்றைய டிஜிட்டல் மயமான வாழ்க்கையில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிரிவில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாகி வரும் வேளையில், இத்துறையில் தமிழ்நாட்டு இளைஞர்களை ஆயத்தப்படுத்த இந்த கோர்ஸ் உருவாக்கப்பட்டு உள்ளது.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் என்றால் என்ன?: டிஜிட்டல் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் என்பவர் ஒரு நிறுவனத்தின் ப்ராடெக்ட் அல்லது சேவைகளை டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தி விளம்பரப்படுத்தி, வாடிக்கையாளர்களை ஈர்த்து, விற்பனையை அதிகரிக்கச் செய்பவர் ஆவர்.
இதுவரையில் நான் முதல்வன் திட்டத்தில் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பலனடைந்துள்ளனர். அதோடு நீங்கள் இந்த இணையதளத்திற்குள் நுழைந்தவுடன் பல்வேறு துறைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உங்களுக்கு ஏற்ற துறையை தேர்ந்தெடுத்து பயிற்சி பெறலாம். பயிற்சி முடிந்து எந்தெந்த நிறுவனங்களில் பிளேஸ்மென்ட் கிடைக்கும் என்ற விவரங்களும் இருக்கும்.
தற்போது வெளியிடப்பட்டிருக்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் ரோலுக்கு 140 மணி நேர பயிற்சி வழங்கப்பட்டு அதன் பிறகு நிறுவனங்களில் பிளேஸ்மெண்ட் வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது. இதற்கான சம்பளமாக 20,000 முதல் 30,000 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள https://candidate.tnskill.tn.gov.in/என்ற இணையதளத்தை பார்வையிடலாம். அதோடு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இது முற்றிலும் கட்டணமில்லாத பயிற்சியாகும்.
இந்தத் திட்டத்தில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் ரோல் மட்டுமின்றி பல்வேறு ரோல்களுக்கு பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகிறது. இது தமிழ்நாடு அரசின் முதன்மையான திட்டம் ஆகும். அனைத்து ஆர்வலர்களுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதுவும் இந்த தளம் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு கோர்ஸ் குறித்த தகவல்களையும் வழங்கி வருகிறது.


Click it and Unblock the Notifications