மும்பை: தற்போது இந்திய சந்தையில் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னிலையில் இருப்பது ஏர்டெல் மற்றும் ஜியோ. இந்தியாவில் இந்த இரு நிறுவனங்கள் தான் 5ஜி சேவையை வழங்கி வருகின்றன.
புதிதாக வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும் இரண்டு நிறுவனங்களுமே போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன.

குறிப்பாக இந்தியாவில் ஓடிடி தளங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் ஓடிடி தளம் சார்ந்த பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்துள்ளன. அந்த வகையில் ஏர்டெல் நிறுவனம் இலவசமாக நெட்பிளிக்ஸை பயன்படுத்தி கொள்ளும் வகையில் ஒரு ரீசார்ஜ் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஏர்டெல்லின் இந்த பிரிபெய்ட் திட்டத்தில் 1,499 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதில் இலவசமாக நெட்பிளிக்ஸ் சந்தா நமக்கு கிடைக்கிறது.
இந்த புதிய ப்ரீபெய்ட் பிளான் திட்டத்தை பொறுத்தவரை ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதேபோல அன்லிமிடெட் வாய்ஸ் கால் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ரீசார்ஜ் திட்டத்தின் காலம் 84 நாட்கள் ஆகும்.
இந்த ரீசார்ஜ் திட்டத்தின் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்கள் நெட்பிரிக்சின் பேசிக் சந்தாவை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த பிளானில் ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர்கள் 84 நாட்களுக்கு இலவசமாக நெட்பிளிக்ஸை பயன்படுத்த முடியும். தற்போது ஏர்டெல் ப்ரீபெய்ட் பிளான்களில் இலவசமாக நெட்பிளிக்ஸ் சேவையை பயன்படுத்த வழிவகை செய்யும் ஒரே ரீசார்ஜ் திட்டம் இது ஆகும்.
பொதுவாக நெட்பிளிக்ஸ் பேஸிக் பிளான் என்பது ஒரு மாதத்திற்கு 199 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது. இதில் பயனாளர்கள் ஹெச்டி ரெசல்யூசனில் வீடியோக்களை காண முடியும். மேலும் உங்களுக்கு தேவையான கருவியில் வீடியோக்களை டவுன்லோட் செய்து கொள்ளவும் முடியும். இந்த பிளானில் அப்பல்லோ 24/7 சர்கிள் மெம்பர்ஷிப் மூன்று மாதங்களுக்கு இலவசமாகவும் கிடைக்கிறது.
நெட்பிளிக்ஸை இலவசமாக பெறுவதற்கு ஏர்டெல் வாடிக்கையாளர்கள் Airtel Thanks செயலிக்கு செல்ல வேண்டும். அங்கே Thanks benefits என்ற பிரிவை கிளிக் செய்ய வேண்டும். அதில் Netflix Benefits கிளிக் செய்து Claim செய்தால் உங்களது நெட்பிளிக்ஸ் சந்தா ஆக்டிவேட் ஆகிவிடும்.
ரிலையன்ஸ் ஜியோவும் இலவசமாக நெட்பிளிக்ஸ் சந்தாவை வழங்கக்கூடிய ப்ரீபெய்டு திட்டங்களை கொண்டுள்ளது . இதன்படி ரிலையன்ஸ் ஜியோவில் நீங்கள் 1,499 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் 84 நாட்களுக்கு நீங்கள் இலவசமாக நெட்பிளிக்ஸ் பேசிக் மெம்பர்ஷிப்பை பெற்றுக் கொள்ள முடியும். 1,099 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்பவர்களுக்கு மொபைலில் நெட்பிளிக்ஸ் மெம்பர்ஷிப் என்பது இலவசமாக கிடைக்கும். Story written by: Devika


Click it and Unblock the Notifications