சென்னை: வேலை தேடும் போராட்டத்தில் இருக்கும் பலருக்கும், தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தும் வகையில் ரெஸ்யூம் மற்றும் கவர் லெட்டர் தயாரிப்பது பெரும் சவாலாக இருக்கும். இந்தச் சவாலுக்குத் தீர்வு காணும் வகையில், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி லிங்க்டின் நிறுவனம் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வேலை தேடுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேலை தேடுவதற்கு ஒரு சிறந்த ஆப் (app) என்றால், அது லிங்க்டின் தான். இதை இணையதளம் மூலமாகவும் பயன்படுத்தலாம். அதனை உபயோகித்து வரும் பயனாளர்களுக்கு இது தெரியும். மேலும் இந்த ஆப் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை பின்பற்ற இருப்பதாகத் தெரிவித்துள்ளது. தற்போது பெரும்பாலான துறைகளில் உதவியாக இருக்கும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI ) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக லிங்க்டின் கூறியுள்ளது. அதில் AI chatbot-ன் மூலம் ஆலோசனைகளை பெறலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த வேலை தேடும் தளத்தில் AI-ஐ பயன்படுத்துவதனால் வேலை தேடும் செயல்முறைகளை மிக எளிதானதாக மாற்றுவதே இவர்களின் நோக்கம் என கூறுகின்றனர். இந்த AI அம்சம் லிங்க்டின் பிரீமியம் (linked premium) பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

இந்த தொழில்நுட்பம் வேலை வாய்ப்புகளை ஒழுங்குபடுத்தும் எனவும் ,பயனர்களின் அனுபவத்தை சிறப்பாக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பயனாளர்களின் பயோடேட்டாக்களை மேம்படுத்தவும் உதவும் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் வேலை தேடுபவர்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் முயற்சியில் இந்த அம்சத்தை லிங்க்டின் கொண்டு வந்துள்ளது.
தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தொழில் வல்லுநர்களை உருவாக்குவதற்கு, லிங்க்டின் அதன் கற்றல் தளங்களை மேம்படுத்தியுள்ளது. அத்தளத்தில் ஒவ்வொரு நாளும் 60-க்கும் மேற்பட்ட புதிய படிப்புகளை சேர்த்து வருகிறது. இதில் 800-க்கும் மேற்பட்ட படிப்புகள் AI சம்பந்தமான மற்றும் AI மீது கவனத்தைக் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் வேலை தேடுவது மட்டுமின்றி நீங்கள் உங்கள் கற்றலையும் தொடரலாம்.
AI-யிடம் உரையாடி வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்த அம்சம் மெட்டா நிறுவனத்தை சார்ந்த chatbot-களை போலவே செயல்படும் எனக் கூறப்படுகிறது. இதன் உதவியால் தங்கள் விண்ணப்பங்களை எளிதாக பதிவேற்றவும், வேலை சம்பந்தமான கருத்துக்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
லிங்க்டுஇனின் தலைமை தயாரிப்பு அதிகாரி டோமர் கோஹென் ஒரு பதிவில், நீங்கள் பெறும் பதில்கள் நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்பட்டவை, ஒவ்வொரு கற்பவருக்கும் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப தகவல்களை வழங்கும் என்று கூறியுள்ளார். லிங்க்டுஇனின் இந்த புதிய AI அம்சம் வேலை தேடுபவர்களுக்கு நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், இது இலவச சேவை அல்ல என்பதே ஒரு குறைபாடு. எதிர்காலத்தில் இது இலவசமாகக் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications