இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் வேளையில் வேக்சின் பெறுவதில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு மத்தியிலும் பல்வேறு பிரச்சனைகளைக் குழப்பங்கள் இருந்தது. இதேவேளையில் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் கோவிட் வேக்சின் தட்டுப்பாடு அதிகமாகவும் இருந்தது.
இந்தச் சூழ்நிலையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருத்தை இலவசமாகக் கொடுக்கவும், மாநில அரசுக்கு வேக்சின் மூலம் நிதி சுமை அளிக்க வேண்டாம் என முடிவு செய்த மத்திய அரசு மொத்த வேக்சின் உற்பத்தியில் 75 சதவீதத்தை மத்திய அரசு வாங்க முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் 18 வயது முதல் இருக்கும் அனைவருக்கும் ஜூன் 21 முதல் இலவசமாக வேக்சின் வழங்கப்படும். இப்புதிய முடிவின் காரணமாக மத்திய அரசு 45,000 கோடி ரூபாய் முதல் 50000 கோடி ரூபாய் அளவிலான தொகையைச் செலவு செய்ய வேண்டி வரும்.
மத்திய அரசு ஏற்கனவே வேக்சினுக்காக 35000 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், தற்போது கூடுதலாக 15000 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதேபோல் ஏழை எளியோருக்கு உதவும் வகையில் Pradhan Mantri Garib Kalyan Anna Yojana திட்டத்தின் கீழ் 2021ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் வரையில் மக்களுக்கு இலவசமாக உணவு பொருட்கள் வழங்க உள்ளதாக மோடி அறிவித்தார்.
இந்தத் திட்டத்திற்காக 1.1 முதல் 1.3 லட்சம் கோடி ரூபாய் அளவிலா தொகையைச் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது. மோடி அறிவித்த இரு அறிவிப்புகளும் மக்களுக்குப் பெரிய அளவில் உதவுவது மட்டும் அல்லாமல் மக்களின் பெரும் சுமையைக் குறைத்துள்ளது.
இதன் மூலம் மத்திய அரசுக்கு 2021-22 நிதியாண்டின் பட்ஜெட் அறிக்கையில் கூடுதலாக 1.15 லட்சம் கோடி ரூபாய் அளவிலான செலவு உருவாகியுள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications