பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) நிறுவனம், தங்களுடைய வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் நோக்கில் "ஃப்ரீடம் 2.0" என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் புதிதாக சிம் கார்டு பெற விரும்புபவர்கள் வெறும் 1 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இதே யுத்தியை இதற்கு முன்னர் ஜியோ நிறுவனம் பயன்படுத்தியது. இலவசமாக சிம் கார்டை வழங்கி வாடிக்கையாளர்களை ஈர்த்தது. தற்போது 1 ரூபாய் செலுத்தி புதிய சிம் வாங்கிக் கொள்ளலாம் என்று BSNL நிறுவனமும் தெரிவித்துள்ளது.
குறைந்த விலையில் சிம் கார்டு வழங்குவதோடு மட்டுமல்லாமல் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதி, தினமும் 1 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் தினமும் 100 SMS போன்ற பல சலுகைகளும் இதில் கிடைக்கிறது. இந்தச் சலுகையை 2027-ஆம் ஆண்டின் பிப்ரவரி 8-ஆம் தேதி வரையில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்.

BSNL ஃப்ரீடம் 2.0: மிகக் குறைந்த விலையில் சிம் கார்டு வழங்கி அதிகளவிலான வாடிக்கையாளர்களை ஈர்ப்பதே ஃப்ரீடம் 2.0 திட்டத்தின் நோக்கமாகும். இந்த சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் 1 ரூபாய் செலுத்தி சிம் கார்டு பெற்று பயன்படுத்தலாம். இதில் 24 நாள் வேலிடிட்டி அடங்கும். 24 நாட்களுக்குப் பிறகு தேவைக்கேற்றார் போல் ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.
சில காலமாகவே முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை அதிகரித்து வருகின்றன. ஆனால் அதோடு ஒப்பிடுகையில் அரசு நிறுவனமான BSNL மிகக் குறைந்த ரீசார்ஜ் பிளானை வழங்கி வருகிறது. பிஎஸ்என்எல் டவர் இல்லா பகுதிகளிலும் டவர் அமைத்து வருகிறது. இந்நிலையில் வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் பொருட்டு 1 ரூபாய்க்கு சிம் வழங்கும் சலுகையை அறிவித்துள்ளது.
ரூ. 1-க்கு BSNL சிம் கார்டு பெறுவது எப்படி?: ஃபிரீடம் 2.0 திட்டத்தின் கீழ் 1 ரூபாய் கொடுத்து சிம் கார்டு பெற வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள BSNL கஸ்டமர் சர்வீஸ் சென்டருக்கு செல்லலாம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிஎஸ்என்எல் விற்பனையாளரை அணுகலாம். KYC சரிபார்ப்பை முதலில் பூர்த்தி செய்ய வேண்டும். அடையாள ஆவணங்கள் மற்றும் முகவரி சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும். இதை முடித்த பிறகு நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு சிம்கார்டு வழங்கப்படும்.
புதிதாக மொபைல் வாங்குபவர்கள், குறைந்த ரீசார்ஜ் திட்டங்களை தேடிக் கொண்டிருப்பவர்கள் பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications
